Friday 29 August 2008

இது கூட நல்ல ப்லோக்

முருங்கப்பட்டி வெங்கடேசனின் பக்கங்கள் உங்களது பார்வைக்காக.........

கோடி சம்பளம் கேட்கிறார்கள் நடிகைகள்

* குசேலன் படத்துக்காக ரஜினிகாந்துக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது...* குசேலன் ஓடாததால் ரஜினி தனது சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுக்கப்போகிறார்...* கேட்ட சம்பளம் கொடுக்காததால் புது வாய்ப்பை மறுத்தார் நயன்தாரா...* கோடி சம்பளம் கேட்கிறார் நடிகை ஜெனிலியா- இப்படி பலவாறான செய்திகள் நடிகர் - நடிகைகளின் சம்பள விவகாரம் தொடர்பாக செய்திகள் தினம் தினம் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதிப்படி ஒவ்வொரு நடிகரும், நடிகையும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்தான் இது.கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த்தான். அவர் ஒரு படத்துக்கு ரூ.25 கோடி முதல் ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். (குசேலன் படத்துக்கு மட்டும் இது பொருந்தாது). கமல்ஹாசன் ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார். (தசாவதாரம் போன்ற பெரிய பட்ஜெட் ப்ளஸ் நீண்ட நாள் கால்ஷீட் படங்களுக்கு மேலும் சில கோடிகள் அதிகம் கேட்கிறார்).ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.10 கோடி. நடிகர் விஜய் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வாங்குகிறார். விக்ரம், விஷால் ரூ.6 கோடி, சூர்யா ரூ.5 கோடி கேட்கிறார்கள். விஜயகாந்த், சிம்பு, தனுஷ், ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்கிறார்கள். நடிகர் சரத்குமார் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு, ரூ.2 கோடி என்றாலும் சம்மதித்து விடுகிறார். ஆர்யா, பருத்திவீரன் கார்த்தி, ஆகியோர் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் பேசுகிறார்கள். ஜெயம் ரவி ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறார். மாதவன், ஜீவா, ஜீவன் மூவரும் தலா ரூ.ஒன்றரை கோடியும், கரண் ரூ.1 கோடியும் சம்பளம் கேட்கிறார்கள். சத்யராஜ், பிரசாந்த் ஆகியோர் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். பிரசன்னா, பசுபதி, ஷாம், ஜித்தன் ரமேஷ், பிருத்வி ராஜ் ஆகியோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்.சேரன் இயக்கமும் நடிப்பும் என்றால் ரூ.3 கோடியும், நடிப்பு மட்டும் என்றால் அதில் பாதியும் சம்பளமாக கேட்கிறார்.காமெடி நடிகர்களில் வடிவேலுதான் அதிக சம்பளம் வாங்குகிறார். பெரும்பாலும் காமெடி நடிகர்கள் தினசரி சம்பள அடிப்படையில்தான் நடித்து கொடுப்பார்கள். அதன்படி வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.8 லட்சம். விவேக் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வாங்குகிறார். கருணாஸ், கஞ்சா கருப்பு, சந்தானம் போன்ற வளரும் காமெடியன்கள் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் அல்லது ஒரு படத்துக்கு ரூ.15 லட்சம் என்று சம்பளம் பேசுகிறார்கள். இவர்கள் தவிர குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் பிரபு, நெப்போலியன், பாக்யராஜ், பாண்டியராஜன், முரளி, சரவணன் உள்ளிட்டோர் நாளொன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.வில்லன் நடிகர்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.நடிகைகள்நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சம். அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷா ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், அசின் ரூ.80 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரையும் வாங்குகிறார்கள். பாவனா ரூ.50 லட்சம் சம்பளம் கேட்கிறார். பத்மப்ரியா, நவ்யா நாயர், பூஜா, சந்தியா, சினேகா, நமீதா, ஸ்னிக்தா ஆகியோர் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். இத்தனை கோடி, அத்தனை லட்சம் கொட்டிக் கொடுத்தாலும் ஹீரோ, டைரக்டர், பிரடியூசர்... அதன் பின் ஸ்‌டோரி (?)இவைகளைப் பார்த்துதான் நாயகிகள் படங்களை ஒப்புக் கொள்வது வழக்கம். இன்றைய நிலவரப்படி நடிகைகளில் ஒன்றேகால் கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, நம்பர் ஒன் இடத்திலும், த்ரிஷா 2வது இடத்திலும் இருக்கிறார்கள். அசின் இந்தி படங்களில் பிஸி என்பதால் இப்போதைக்கு அவுட் ஆப் கோலிவுட்.மேற்படி நடிகர், நடிகைகள் தவிர துண்டு துக்கடா நடிகைகளுக்கு பத்து முதல் 20 லகரங்கள் சம்பளமாக பேசப்பட்டு, அதில் பாதியையாவது சம்பளமாக கொடுத்து படம் எடுக்கின்றனர் தமிழ் பட அதிபர்கள்.ஒரு காலத்தில் நடிகர்களின் சம்பளம் கூட லகரங்களைத் தொடாத தமிழ் சினிமாவில் இன்று நடிகைகளின் சம்பளம் சிகரம் வைத்த மாதிரி கோடிகளை ‌சர்வ சாதாரணமாக தொடுவதும், தாண்டுவதும் ஆச்சர்யப்படத்தக்க ஒன்றுதான்.