Thursday 30 April 2009

engo padithathu

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

Wednesday 29 April 2009

சென்னையில் இருந்து ஒரு ரயில் பயணம்

இந்த சுட்டிகையை நான் S.Ramakrishnan ரயில் பயணம் பற்றின ஒரு கட்டுரை படிக்கும் போது எழுத தூண்டியது . நான் சென்னையில் வாசித்த கால கட்டத்தில் 1994-2004 ஆண்டு வாக்கில் முதல் நாலு வருடம் அண்ணா பழகலை கழக வாசம் . அப்போது விடுமுறையின் போது எல்லாம் ஊருக்கு போகும்போது ஒரு தெனாவாட்டு இருக்கும் ஏன் என்றால் அண்ணா பழகலைஇல் படிக்க இடம் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்தது . அப்போது எல்லாம் ரயில் இல் செல்ல கல்லூரியில் பாதி தொகை கட்டி டிக்கெட் எடுத்து செல்ல பாஸ் கிடைக்கும் . விடுமுறை பாஸ் இல்லாத போது எப்பவும் Unreservation பயணம் தான். புதிதாக செல்வோருக்கு எப்படி இடம் பிடிப்பது என்பது தெரியாததால் நிறைய கல்லூரி நண்பர்கள் ஒன்று சேர்ந்து உட்கார இடம் பிடித்து கும்பலாக செல்வோம். தீபாவளி பொங்கல் போன்ற விடுமுறை பயணத்தின் போது நின்று கொண்டு பயணம் செய்ய கூட இடம் கிடைக்காது . ரயில் பெட்டிஇன் TOILET இரண்டிக்கும் இடையில் உள்ள சந்தில் நின்றுகொண்டே கூட பயணம் செய்தது உண்டு . சில நேரம் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு அரைதூக்க கலக்கத்தில் சென்றதுண்டு . சென்னையில் இருந்து ஈரோடு பயணம் எப்பவும் இரவு ஒன்பது மணிக்கு கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் . அடித்து பிடித்து பெட்டிக்குள் திணித்து கொண்டு சென்றால் ரயில் கிளம்பும் நேரம் வரும் சில குடும்பங்களையும் பார்க்கலாம் . அவர்கள் கணவன் மனைவி மகன் மகள் மற்றும் வயதான அம்மா என ஒரு குடும்பமே கூட ஒரு இரவு முழுவதும் தூங்காமல் எங்களுடன் ரயிலில் கடத்தும் . என்னக்கு எப்பவும் காலை குறுக்கி படுத்து தூங்கும் பழக்கம் ஆனால் அதுக்கு கூட இடம் கிடைக்காது . சில நேரம் நின்று கொண்டே முழு இரவையும் கடத்த வேண்டி இருக்கும் . முழங்காலுக்கு கீழே சில நேரம் வலி பின்னும் இருந்தாலும் ஊருக்கு போகிற சந்தோஷத்தில் ஒன்னும் தெரியாது. எப்போது அம்மா அப்பா அவர்களை பார்கிறோமே அப்போதே காணமல் போய்விடும் . மற்றும் சொந்த ஊரில் சொந்த பந்தங்களை பார்க்கும் போது இருக்கும் ஒரு உணர்வு வேற எங்கையும் கிடைக்காது.
ரயில் விடியும் போது மொரப்பூர் வந்து விடும் . அப்போது இருந்தே ரயில் பாதையின் இரு பக்கமும் வாழும் மக்களின் அன்றைய வாழ்கையை பார்க்கலாம் . நிறைய சிறு கிராமங்களில் ஒரு சில வீடுகளே இருக்கும் . சில இடங்களில் சிறு குழந்தைகள் சரியான துணி கூட உடுத்தாமல் சந்தோசமா கை காட்டி டாட்டா சொல்லும் நாமும் பதிலுக்கு சொன்னால் ஒரு பெரிய மகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் பார்க்கலாம் . உள்ழகில் விலை மதிப்பு இல்லாத ஓன்று குழந்தைகளின் சிரிப்பு ஓன்று தானே . மற்றும் பெரியவர்கள் சிலர் மாடுகளை மேய்க்க காடுகளுக்கு சென்றுகொண்டு இருப்பார் . எங்கள் ஊர் பக்கம் பழைய சொத்துக்கு முன்னாடி பண்டங்களை மேய்சல் காட்டுக்கு கொண்டு மெய்து வருவது வழக்கம் . பழைய சோறு என்பது காலையில் இரவு சாபிட்டது போக மீதியை தண்ணீர் விட்டு ஊற வைத்து காலையில் பச்சை மிளகாய் உடன் சாப்பிடுவது . வெயில் காலத்தின் போது பழைய சோறு குடிப்பது ஒரு அலாதியான சுகம் . இன்றைய முனேறிய சமுதாயத்தில் மிகவும் ஏழைகள் வீட்டில் கூட பழைய சோறு கிடைப்பது அரிது இன்னு நினைகிறேஅன்.

:: RAMAKRISHNAN :: தண்ணீரோடு பேசுங்கள்.

உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள்  பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin  ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும்பயணத்திலிருக்கிறாள்.


கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் போலுள்ளது.


இது உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று.  ஏரியின் ஆழம் மிக அதிகம். பரப்பளவும் கண் கொள்ளமுடியாதது. இதன் கரைகளில் பூர்வ குடிகள் காலம் காலமாக வசித்து வருகிறார்கள்.


ஆனால் சமீபமான ஆண்டுகளில் இந்த ஏரிகளில் தொழிற்சாலைகளின் மாசுபடுதல் மற்றும் சூழல் சீர்கேடுகள் மிக அதிகமாகி வருகிறது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் குடிநீரை முப்பது மில்லியன் மக்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார்கள்.


ஏரியில் இருந்து கிடைக்கும் மீன்களே பூர்வ குடிகளின் பிரதான உணவு.  தொழிற்சாலைகளின் கழிவுபொருள்கள் மட்டுமின்றி ரசயான கலப்புகள் காரணமாக மீன்கள் குறைவதோடு, தண்ணீரின் இயல்பும் பெரிதும் மாறியிருக்கிறது.

இந்த ஏரியைச் சார்ந்து வாழ்ந்த பூர்வகுடி பெண்களில் ஒருவரான ஜோசபின் மண்டாமின் ஒவ்வொரு நாளும் ஏரியை காணச் செல்லும் போது அதன் மாசுபடுதல் மற்றும் அழிவை கண்டு மனம் பொறுக்காமல் கண்ணீர் விடுவாள்.

அவள் தண்ணீர் உயிரோடு உள்ளது என்று நம்பக்கூடியவள். ஆகவே தண்ணீரோடு தினமும் பேசுவாள். உலகின் மிக ஆதிஉயிர் தண்ணீர் தான்  என்று சொல்லும் அவள் தண்ணீர் தன்னிடம் அதை காப்பாற்றும்படியாக கெஞ்சியது. அது உலகின் ஆதி தாய் தன் பிள்ளைகளிடம் கேட்பதை போலிருந்தது என்கிறாள்.

சாவின் பிடியில் உள்ள தண்ணீரைக்  காப்பாற்ற வேண்டியது தனது வேலை என்று உணர்ந்த ஜோசபின் ஒரு வாளியில் ஏரித்தண்ணீரை நிரப்பிக் கொண்டு தன்னோடு நெருக்கமாக உள்ள இரண்டு பாட்டிகளையும் அழைத்துக் கொண்டு ஏரியை சுற்றிவருவது என்று கிளம்பினாள்.

அதாவது கால்வாசி கனடாவையும் கால்வாசி அமெரிக்காவையும் ஒன்றாக சுற்றிவருவது போன்றது அந்தப் பயணம். எதற்காக கையில் வாளியில் தண்ணீர் கொண்டு போகிறாள் என்று வழியில் உள்ளவர்கள் கேட்டதற்கு தண்ணீர் உயிர் தரும் சக்தி. தண்ணீர் மக்களை ஒன்று சேர்க்கும் வலிமையானதொரு பிடிப்பு. இரண்டு நாடுகளை தண்ணீர் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. நாம் உருவாக்கிய எல்லைகள் தான் நம்மை பிரித்து வைக்கிறது.

பெண் தண்ணீரை சுமப்பவள். கர்ப்பத்தில் உள்ள குழந்தை தண்ணீரில் தான் வளர்கிறது. ஆகவே எதிர்கால தலைமுறைக்காக தண்ணீரை காப்பாற வேண்டியது நமது வேலை. அதை உலகிற்கு தெரியப்படுத்த ஏரி தண்ணீரில் ஒரு வாளி அள்ளிக் கொண்டு நடக்கிறேன்.

படித்தவர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் என்று எவ்வளவோ பேர் இரண்டு நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விட பூர்வகுடி மக்களான நாங்கள் அதிகம் தண்ணீரை நேசிக்கிறோம். அக்கறை கொள்கிறோம். அதை வெளிக்காட்ட பூர்வகுடிகளின் இறகுகளை கொண்டு செல்கிறோம்.

உண்மையில் அறிவாளிகள் செய்ய மறந்ததை பலநேரம் படிப்பறிவற்றவர்கள் தங்கள் செயலால் மாற்றி காட்டியிருக்கிறார்கள். எனது தண்ணீருக்கான நடை பயணமும் அப்படி பட்டதே என்று சொல்லும் ஜோசபின் ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்.

அவளது நடைப்பயணத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. பூர்வகுடி மக்களும் சூழல் அக்கறையாளர்களும் அவளுடன் சேர்ந்து நடக்கிறார்கள். வழி முழுவதும் தண்ணீர் குறித்த தொன்மையான நாட்டார் பாடல்களை பாடுகிறார்.
தண்ணீர் நோய்மையுற்றிருக்கிறது. அதை நமது பிரார்த்தனைகளின் வழியே சுத்தம் செய்வோம் என்று பிரசங்கம் செய்கிறாள். கிரேட்டர் லேக் மிகப் பெரியது என்பதால் அவளது பயணம் ஒவ்வொரு ஏரியாக கடந்து செல்கிறது. ஒரு ஏரி என்பதே பலநூறு மைல் நீளமானது.

சில இடங்களில் அவள் தண்ணீரை நெருங்கி சென்று அதோடு பேசுகிறாள். தண்ணீரே, தண்ணீரே நீ எங்களுக்காக எவ்வளவு தந்திருக்கிறாய். உனக்காக தான் நாங்கள் இப்போது குரல் தருகிறோம். எங்களை காப்பாற்றியது போல நீ எங்களது எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டும். ஆலை கழிவுகள் நிரம்பிய தண்ணீரால்  மனிதர்கள் மட்டுமில்லை மீன்கள், விலங்குகள், மற்றும் பறவைகள் யாவும் பாதிக்கபடுகின்றன. ஆகவே எனது போராட்டம் உயிரினங்கள் யாவற்றிற்கும் பொதுவானது என்று சொல்கிறார் ஜோசபின்

சில நேரம் அவளால் தண்ணீரோடு பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை பற்றிக் கொள்கிறது. தண்ணீரின் முன்பாக நின்றபடியே அழுகிறாள். அவளது கண்ணீர் ஏரியில் விழுகிறது. தன் கையில் வைத்திருந்த பரிசு பொருட்கள் சிலவற்றை தண்ணீருக்காக படையல் செய்கிறாள்

ஏரி தண்ணீரை பயன்படுத்தி தனது மூதாதையர்கள் செய்த விவசாயம் மற்றும் அந்த ஏரியிலிருந்து கிடைத்த மீன்கள் பற்றிய தனது நினைவுகளை அவள் பகிர்ந்து கொள்கிறாள். மற்றவர்களையும் தன்னோடு பகிர்ந்து கொள்ளச் செய்கிறாள். இந்த தண்ணீருக்கான நடை இயக்கம் மிகுந்த கவனம் பெற்றதோடு நதிநீர் குறித்த தேசிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

வயதான காலத்தில் அவரவர் வீட்டிற்குள்ளாகவே நடப்பதற்கு கூட முடியாமல் சோம்பிக் கிடக்கும் சூழலில் பொதுவான அக்கறையில் 17000 ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் ஜோசபின் நடந்து சென்றது எளிதான விஷயமில்லை. அது அவளது மனவலிமையையும் உலகின் மீது அவள் கொண்டிருக்கும் தீவிர அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.

பூர்வ குடிகளை வெள்ளை அதிகாரம் காலம் காலமாக அடக்கியும் ஒடுக்கியும் அவர்களது தனித்தன்மைகளை அழித்து அடிமைகளை போலாக்கி வைத்திருக்கிறது. ஆனால் அந்த பூர்வகுடிகளில் இருந்து ஒரு பெண் உலகைக் காக்க போராட கிளம்பியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

ஆரம்பத்தில் மக்கள் தனது நடைபயணத்தை பரிகாசம் செய்தார்கள். ஆனால் நான் தண்ணீரை போலமுடிவற்று போய்க்கொண்டேயிருந்தேன்.  இன்று அதற்கான சரியான எதிர்வினையும் கவனமும் கிடைத்திருக்கிறது என்கிறார் ஜோசபின்.

இன்றும் அவளது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பூர்வகுடிகளின் பாடல்களுடன் துவங்கும் அவளது நடைபயணத்தில் பல நூறு பேர் சேர்ந்து நடக்கிறார்கள். ஊடகங்கள் அவளைப் பின்தொடர்கின்றன.

அதிகாலையில் நிழல் உருவங்கள் போல கையில் வாளியோடு பெண்கள் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி ஏரியின் வழியிலே நடந்து போகிறார்கள். இருள் வரும் தொடர்கிறது பயணம். இரவில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்கி கொள்கிறார்கள்.

தண்ணீரை காப்பாற்ற குரல் தந்தபடியே நெடும்பயணத்தில் உள்ள ஜோசபின் மண்டாமின் என்ற முதியவள் நம் காலத்தின் நாயகி. அவளை கொண்டாடுவோம். அடுத்த முறை தண்ணீரை பயன்படுத்தும் போது சற்று கவனித்து அது எங்கிருந்து வந்தது. எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அறிந்து செயல்படுவோம். இயற்கை வளங்கள் அழிவுறும் போது அதை காப்பது நம் அனைவரின் கூட்டு செயல்பாடு என்பதை கவனித்தில் கொள்வோம்.

****
இன்றும் சென்னையின் நுங்கம்பாக்கம் மேற்குமாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் லேக் ஏரியா என்ற வீதிகள் இருக்கின்றன. ஆனால் அங்கே இருந்த ஏரிகள் காணாமல் போய்விட்டன.  ஏரிகளின் மீது வீடுகளும் கட்டிடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகருக்குள் பதிமூன்று ஏரிகள் இருந்துள்ளன என்கிறது பிரிட்டீஷ் ஆவண குறிப்பு.

இன்று மாநகருக்குள் ஏரி இருந்த இடம் வீதியின் பெயராக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இது போல காணாமல் போன ஏரிகள் தமிழகம் முழுவதுமே இருக்கின்றன.  அந்த ஏரிகளின் பெயர்களை அழிக்க முடியவில்லை. அவை அப்படியே மக்கள் நினைவில் இருக்கின்றன.

தண்ணீர் பஞ்சம் வரும் நாட்களை தவிர மற்ற நேரங்களில் நம் கவனம் தண்ணீரின் மீது இருப்பதேயில்லை. அப்போதும் கூட இது பெண்களின் பிரச்சனை என்று ஒதுங்கி கொண்டுவிடுகிறோம்.

நம் காலத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர். நதி நீர் பங்கீடில் துவங்கி அன்றாட குடிநீர் வரை அது வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தென்மாவட்டங்களில் தண்ணீர் மிக முக்கியமான விற்பனை பொருள். அதிலும் விவசாயம் பொய்த்து போன கிராமங்களில் உள்ள  ஊற்றுள்ள கிணறுகளை தொழில் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றன. இரவும் பகலும் அதிலிருந்த தண்ணீர் லாரி லாரியாக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இன்னொரு பக்கம் இயற்கையான நீர்தேக்கங்கள், ஏரிகள் ஊரணி யாவும் பராமரிப்பின்றி தூர்ந்து கிடக்கிறது. நானூறு ஐநூறு அடி தோண்டியும் கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை.

இந்த பிரச்சனையின் தீவிரம் அறியாமல் நம்மை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மழை மட்டுமே. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் மழை சீராகவே இருக்கிறது. ஆனாலும் கிராமம் வரை பாட்டில் குடிநீரும், தண்ணீர் வணிகமயமாக்கலும் மிக அதிகமாகவே நடந்து வருகின்றது. அது குறித்து நமது கவனமோ, அக்கறைகளோ மிக குறைவே.

இயற்கை சீரழிவுகள் குறித்த விஷயங்கள் பெரிதும் சுற்றுசூழல் ஆய்வாளர்களுக்கு மட்டுமே உரியது என்ற பொது புத்தி தான் நமக்கிருக்கிறது. மின்சாரமற்று போன இரவில் காற்றே வரவில்லையே என்று ஆதங்கப்படும் பலரும் மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஏன் காற்று வரவில்லை என்று யோசிப்பதேயில்லை. காற்று, தண்ணீர், நிலம் என்று நம்மை சுற்றிய இயற்கையை அதிவேகமாக அழித்து கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் குளங்கள் இல்லாத கோவில்களே இல்லை எனும் அளவு பெரியதும் சிறியதுமான குளங்கள் இருக்கின்றன. இதில் மிக சொற்பமானதில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும் சில குளங்களில் மட்டுமே குடிநீராகஉள்ளது. எல்லா கோவில்களுக்கும் லட்சக்கணக்கில் வருவாய் உள்ளது. குறைந்த பட்சம் கோவில் குளங்களை முறையாக பராமரித்து அதை குடிநீராக பயன்பத்துவதற்கு ஏற்பாடு செய்தால் கூட பலஊர்களில் வருடம் முழுவதும் குடிநீர் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எனது அருகாமை வீட்டில் உள்ள பள்ளிச்சிறுமி ஒரு நாள் ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரை தரையில் ஊற்றி உற்று பார்த்தபடியே இருந்தாள். என்ன பார்க்கிறாள் என்று கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவள் ஆர்வத்துடன் இன்னொரு டம்ளர் தண்ணீரை தரையில் ஊற்றி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.  என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.

எதற்காக தண்ணீர் தரையில் பட்டவுடன் ஒடத்துவங்கிவிடுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாள். அது தான் தண்ணீரின் சுபாவம் என்றேன். உடனே அவள் டம்ளரில் இருக்கும் போது தண்ணீர் ஏன் ஒட முயற்சிக்கவேயில்லை என்று  கேட்டாள்.

நீ இப்போது தான் தண்ணீரை கவனிக்க ஆரம்பித்திருக்கிறாய் என்று பாராட்டினேன்.

அவள் தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் வாளியினுள் தன்விரலை விட்டு ஆட்டியபடியே தண்ணீருக்குள் எப்படி விரல் எளிதாக நுழைந்துவிடுகிறது என்று கேட்டாள். நான் சிரித்தபடியே உன் விரல் மட்டுமில்லை. ஆகாசம் கூட சப்தமில்லாமல் தண்ணீருக்குள் நுழைந்துவிடும் என்றேன்.

அவள் ஆமாம் பார்த்திருக்கிறேன் என்றபடியே நான் தண்ணீரோடு பேசிக் கொண்டிருப்பேன் என்று சொன்னாள். நீ மட்டுமில்லை நானும் பேசுவேன் என்றேன். அவளால் நம்பமுடியவில்லை. பெரியவர்கள் யாரும் தண்ணீரோடு பேசுவதில்லை அவர்கள் தண்ணீரை வீணடிக்கிறார்கள் என்று சொன்னபடியே திரும்பவும் விளையாட துவங்கினாள். தண்ணீரோடு விளையாட விரும்பாத சிறார்களே இல்லை.

தண்ணீர் மனிதர்களை ஒன்று சேர்க்க கூடியது. எல்லா துயர்களில் இருந்தும் நீராடுதல் மனிதனை விடுவிக்க கூடியது. ஆற்றை போல மனிதனை சாந்தம் செய்யவும் புத்துணர்வு கொள்ளவும் வைக்கும் வேறு துணை யார் இருக்கிறார்கள். ஆற்றின் படித்துறையை விட உலகின் அழகான இடம் வேறு என்ன இருக்கிறது.

தண்ணீரின் இயல்பான ருசியை நாவு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது. ஒவ்வொரு ஊரின் தண்ணீருக்கும் ஒரு மணமும் ருசியுமிருக்கும். அதிலும் ஊற்றுத் தண்ணீருக்கு உள்ள குளிர்ச்சியும் ருசியும் அலாதியானது. ஆனால் இன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாகி விட்டது.

தண்ணீர் நம் காலத்தின் அதிமுக்கிய பிரச்சனை. அதை நாம் கவனம் கொள்ள மறப்பது கண்ணை மூடிக் கொண்டு நெடுஞ்சாலையின் ஊடே நடப்பது போன்றது. விபத்தின் பின்னால் நமது கவனம் பற்றி பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

தேர்தலுக்கான வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் இந்தச் சூழலில் எவரது தேர்தல் அறிவிப்பிலும் இயற்கை வளங்களை காப்பது பற்றியும் நீர்வளம் அதன் முறையான பாதுகாப்பு பங்கீடு பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லை.

**
எனக்கு தேவதச்சனின் கவிதை வரி நினைவிற்கு வருகிறது

கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
முழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்.

**
தண்ணீரோடு பேசுங்கள் என்று ஜோசபின் மண்டாமின் சொல்வது நாம் அனைவரும் பின்பற்றபட வேண்டியதும் அக்கறை கொள்ள வேண்டியதும் என்பதை இந்த கவிதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.
**

எஸ்.ராமகிருஷ்ணன்

வாழ்க்கை என்பதே தொடர்பு படுத்திக் கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் தானே.

Tuesday 28 April 2009

Thursday 23 April 2009

ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் உங்கள் கையில் ????????

இலங்கை தமிழர் உயிரும் வாழ்வும் நமக்கு தேர்தல் விளையாட்டாக போய் விட்டதை எண்ணி ஒவ்வொரு தமிழரும் வெட்கி தலை குனிவோம் . இப்படி பட்ட ஒரு வெட்கம் கெட்ட அரசியால் வாதிகளை பெற்ற நாம் ஓட்டு என்னும் ஆயுதத்தை எப்படி உபயோகிக்க உள்ளோம் . வழக்கம் போல் பிரியாணி வாங்கி சாப்பிட விட்டு ஜே போட போறோமா இல்லை அவர்கள் கொடுக்கும் நூறு இநூறுரூவவுக்கு கை நீட்டபோறோமா ?????. அந்த நரபலி காங்கிரஸ் கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டஓர் அறிய வாய்ப்பு ...!!! காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டை விட்டு துரத்தி அடிப்போம். தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ் கூடணிககு ஒட்டு போடுவதை தவிர் பதே . அப்படி இல்லாமல் ஒட்டு போடுவது தமிழ் இனம் அழிய நாமே ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்வதுபோன்றது . நீங்கள் உங்கள் இனத்தை அழிக்க விருப்ப மாக உள்ளீரா ??? ஆம் என்றல் இந்த பக்கத்தை படிப்பதை இத்துடன் முடித்து (கொள்)ளுங்கள் . உங்கள் தமிழ் ஒழிப்பு நடவடிக்கைக்கு உலக தமிழ் சமுதாயத்தின் கண்டனம் .


ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதருக்காக ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் கேள்வி குறி ஆகியிருப்பதை என்னணி மனம் வெம்புகிறது . இரவுகளில் ஒவோஅறு தமிழரும் தூக்கம் தொலைகிறான் . அடுத்த நாள் செய்தி தாள் கையில் எடுக்கும் போதும் கை நடுங்கு கிறது. இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க கிடைக்கும் சந்தர்பத்தை தவற விடாதீர்கள் . உலக தமிழ் உணர்வாளர்களும் ஓன்று சேர்ந்தால் உலகமே செவி சாய்க்கும் இந்த வேலை யில் தமிழ் நாட்டு தமிழ் உணாவுகள் என்ன செய்ய போகிறோம் வழக்கம் போல டி கடையில் அமர்ந்து கதை பேசி காலம் கழிக்க போகிறோமா ???? இல்லை தமிழ் தமிழ் என்று கூறி தன் குடும்பத்தை கோடீசுவரன் ஆக்கும் ஒரு கும்பலை நாம்பி வழக்கம் போல் ஏமாற போகிறோமா ??? இந்த கேள்விகள் தமிழ் உணர்வுள்ள ஒவொருவரின் மனதிலும் கொஞ்ச காலமாகவே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது . அதை செயல் படுத்த சந்தர்பம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு !!! தவற விடோம் என்றல் உங்களை உங்கள் மனசாட்சி கட்டாயம் மன்னிக்காது . மனசாட்சி இல்லாத ஒரு மிருக வாழ்கை உங்களுக்கு உங்கள் கையில் தான் உள்ளது தமிழர்களே மறந்து விடாதீர்கள் ???

விடுதலை புலிகளை தான் அழிக்கிறோம் தமிழ் மக்களை அல்ல என்று எந்த ஒரு காங்கிரஸ் காரனாவவது சொல்ல முடியுமா ?? முடியாது ஏன் என்றல் அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் அல்லவா எதிரி !!! அவர்கள் எதிரி லிஸ்ட் இல் தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் .

ஒரு லட்சம் சகோதர உறவுகள் கொல்லப்பட்டு விட்ட நிலையில் . மற்றும் ஒரு லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் உங்கள் உணர்வுகள் இன்னும் உங்கள் மன சாட்சியை எழுப்ப வில்லை என்றல் உங்கள் மனம் என்ன கள்ளா???? என்று நீங்களே கேட்டு கொள்ளுங்கள் . உங்களை போன்ற ஒரு மனித தன்மை அற்ற மனிதனுக்கு எந்த ஒரு பதிலும் தரமுடியாது என்பதால் வெட்கி தலை குனிகிறேன். உங்களுக்கு இந்த ஒரு நிலை கூடிய விரைவில் வரும் அப்போது உலகின் எதோ ஒரு மூலையில் ஒரு தமிழ் உயிர் வேதனை படும் ஏன் என்றல் அது தான் தமிழ் உணர்வு ?? அது தான் தமிழனின் பண்பாடு ?? எதிரியையும் மன்னித்து ஏற்கும் பண்புள்ளவன் தான் தமிழன் ?? அது இன்று நேற்று அல்ல பல நூறு வருடமாக நாம் பழக்க படுத்தி கொண்டுள்ள ஒரு பண்பாடு .

Monday 20 April 2009

காதலுக்கும், கல்யாணத்துக்கும்

காதலுக்கும், கல்யாணத்துக்கும்
 
காதலுக்கும், கல்யாணத்துக்குமநிறைவித்யாசமஇருக்க

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்


* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்


* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.


* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்


* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்


* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.


* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.


* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.


* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.


* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.


* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்...

கழுத ஒண்ணு வந்துகிட்டே .......

மாத‌வி : என்னடி எப்ப பார்த்தாலும் உன் பின்னாடி கழுத ஒண்ணு வந்துகிட்டே இருக்கு?

தே‌வி : என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டர் எல்லாத்தையும் இது கிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே சுத்துது!

Thursday 16 April 2009

மொக்கை முனியாண்டி

மொக்கை முனியாண்டி
உன் தந்தை ஏழை என்றால் நீ அதிர்ஷ்டமில்லாதவன் ..
உன் மாமனாரும் ஏழை என்றால் நீ அறிவில்லாதவன் ...

Wednesday 15 April 2009

Tuesday 14 April 2009

வெற்றி மாலை DO IT NOW - இப்பொழுதே செய்து முடி என்பதே

முடிவெடுங்கள்
அன்பர்களே !

திரு மாறன் என்பவர் எழுதிய வெற்றி மாலை என்ற நூலிலிருந்து .....

முடிவெடுங்கள் :
-----------------------
வெற்றியாளனாக வேண்டுமென்றால் இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். எக்காரணத்தை
முன்னிட்டும் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போட்டு விடுங்கள். ஜப்பானியர்கள்
உயர் நிலையை அடைய முக்கிய காரணமாக அவர்கள் சொல்வது DO IT NOW - இப்பொழுதே
செய்து முடி என்பதே !

நாம் பெரும்பாலும் காரியங்களைச் செய்வதில் தாமதம் செய்து, சாதாரணமாக
முடிவெடுக்க வேண்டிய செயல்கள் தாமதமாகி, அவசரச் செயலாகவும், அவசரச்
செயல்களை மீண்டும் தாமதம் செய்து, மிக மிக அவசரச் செயல்களாக,
அரைகுறையாய்ச் செய்து முடிப்போம்.

எனவே முடிவெடுத்து விட்ட நிலையில் சிறிதும் தாமதிக்காமல் உங்கள்
செயல்களைச் செய்யத் திட்டமிடுங்கள்.

காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை.

எனவே காரணங்களைத் தவிர்த்து காரியம் கைகூட இப்பொழுதே முடிவெடுங்கள்.

நட்புடன் ... சீனா

அன்னை தெரசா

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த
நேரம் இருக்காது.-- அன்னை தெரசா: