மறுநாள், என் முன் பார்கவி. நான் பேசுவதற்கு முன், ஒரு துண்டு காகிதத்தை என் கையில் திணித்தாள். பிரித்து படித்தேன். "நேற்று வராததற்கு என்னை மன்னித்து விடு". என் பூரிப்பிற்கு அளவே இல்லை. என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, இப்படி சொல்கிறாள் என்றாள், அவளுக்கு என் மேல் நிச்சயமாக காதல் இருக்கிறதென "நானே" முடிவு செய்து கொண்டேன். அவள் மீது எனக்கு சற்றும் கோபம் இல்லை என்பதை தீர்க்கமாக சொல்ல நினைத்தேன். ஆனால் எப்படி?..காதலில் ஜெயித்து விட்ட அந்த கணத்தில் ஒரு கவி என்னுள் எழுந்தான்... அவன் இப்படி எழுதி கொடுத்தான்...
==============================
உன்னை காற்றில் தேடினேன்,
கணிப்பொறியை கேட்டேன்,
ஆனால் காகிதத்தில் வந்தாய்.
மன்னித்தேன்....,
தாமதமாய் வந்ததனால்
காகிதத்தை!!!!
==============================
இறுதி தேர்வு நடந்து கொண்டு இருந்தது. இன்னும் என் காதலை சொல்லவில்லை. கல்லூரி இறுதி தேர்வு முடிந்த பிறகு ஒரு நாள் எல்லா மாணவர்களும் ஒன்று சேர்வதென முடிவாகி இருந்தது...அந்த நாளை குறித்து வைத்து இருந்தேன்.....காதல் கடிதமும் தயார். அந்த நாளும் வந்தது.... பார்கவி காணவில்லை. சின்ன குழந்தை போல அங்கும் இங்கும் தேடிப்பார்க்கிறேன். ஆள் இல்லை. பவித்ராவிடம் கேட்கிறேன்...பார்கவியா, அவளுடைய பாட்டி செத்து போய்ட்டாங்க அதனால அவ இன்னைக்கி வரல என்றாள்.
ஹும்...நல்ல நாளில் போவதற்கென்றே எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி Reserve ல் இருப்பாங்க போல இருக்கு என்று நினைத்தபடி...நான் எதிர் திசையில் நடந்தேன்.
விதி, இன்னும் என் பார்கவியை என்னுடன் சேர்க்கவில்லை.
இப்பொழுது கணினி பொறியாளனாக ஆகி விட்ட எனக்கு அடுத்த இருக்கையில், பார்கவியை போலவே
ஒரு அழகான மங்கை Code அடித்துக்கொண்டு இருக்கிறாள் .
இவளுக்கு ஒரு கவிதை எழுதி தரலாமா...கண்களை மூடி கவிதையை சிந்திக்கிறேன்.... கண்களில் நெருப்பும், கையில் செருப்புமாக என்னுடைய மனைவியின் பிம்பம்..................
காதலிப்பதும், கவிதை எழுதுவதுமான சொர்கத்தை இழந்து விட்டது இப்போது தான் புரிந்தது......!!
பி.கு. : இதைப்படிக்கும் அனைவரும், குறைந்தது 10 நபருக்காவது Fwd., செய்ய வேண்டும்.
தவறுபவர்களுக்கு கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.
கல்யாணமாகாதவர்களுக்கு :கூடிய விரைவில் திருமணமாகும் ஜாக்கிரதை...
கல்யாணமானவர்களுக்கு : உங்களுக்கு எந்த தண்டனை கொடுத்தும் இதற்கு மேல் துன்புறுத்தி விடமுடியாது....என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
No comments:
Post a Comment