Thursday, 26 June 2008

வலையில் சுட்டது பழமொழிகள்

“தனிமனித வழிபாடும், தலைவன் வழிபாடும் ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது”
--நா.கோவிந்தசாமி

“ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன”. ---கலீல் ஜிப்ரான்

பிழையே செய்ததில்லை என்று சொல்பவன் புதிதாக எதையும் முயற்சித்தவனில்லை.
~ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


நேற்று தொலைத்த என்னை இன்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன் நாளை நான் கிடைப்பேன் என்ற நம்பிக்கையில்
-ஓர் ஆட்டோ வாசகம்

ஒரு பாதி வாழ்க்கை தன் பெற்றோர்களால் நாசமாகிறது. மறுபாதி வாழ்க்கை தன் குழந்தைகளால் நாசமாகிறது.

If you cann't convince them, confuse them.
~Harry S தருமன்

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
-புத்தர்

சாமியார்களும் நானும் - சில கிளு கிளு தேடல்களும்

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டு. எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில் ஏற்றினால் கபால மோட்சம் கிடைக்குமென நூலக புத்தகங்கள் கூற ஆரம்பித்தன. சுக்கிலம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளவே “நான் ஏன் பிறந்தேன்” “நான் எப்படி பிறந்தேன்” ‘மாதிரி’யான புத்தகங்களை நூலகத்தில் தேட ஆரம்பித்தேன். ‘மாதிரி’ என்று ஏன் சொல்ல வந்தேனென்றால் “Reproduction organ” பற்றிய அனாடமி புத்தகமாக இருந்தாலும் அந்த வயதில் அது ஒரு ‘மாதிரி’ தான். பாளையங்கோட்டை நூலகத்தில் சைக்காலஜி பகுதியில் எவனும் சும்மா கூட தலைவச்சி படுக்கமாட்டான். ஆட்கள் அற்றுப் போன சைக்கலாஜி செக்ஷனில் அனாடமி புத்தகத்தை பதுக்கி வைத்து தினமும் அரைமணி நேரம் கால் கடுக்க நின்று அதே இடத்தில் படித்து சுக்கிலத்தை அறிந்துக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
பக்தி,சமய, தத்துவ புத்தகங்களை அலசி ஆராய்ந்ததில் அறிந்த சில விசயங்கள்:
1. விந்து போன்ற இனப்பெருக்கத்துக்கு உதவும் உடற்பொருட்களே ஆசையை தூண்டுகிறது. வழக்கம் போல் புத்தர் போட்டுத்தாக்கிய “ஆசையே துன்பத்திற்கு காரணம்”.2. சுக்கிலத்தை நாடி நரம்பின் வழியாக மேலேற்றி மேலேற்றி ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருத்தினால் சமாதி கிட்டும்.[உண்மையிலேயே சமாதி தான்]3. பிரம்மாச்சாரியம் என்பது ஆணுறுப்பு குழாய் வழியாக பாலை உறிஞ்ச வேண்டும். பிரம்மச்சாரிய சாமியார்கள் இதை அடிக்கடி செய்வார்கள் [என்னாங்கட! ஆணுறுப்பு என்ன அன்னப்பறவையாட பாலை மட்டும் உறிஞ்சி எடுப்பதற்கு]4. சில புத்தகங்கள் கொஞ்சம் சயிண்ட்டிபிக்காக சொல்ல வந்தது என்னவென்றால் உடம்பில் இருக்கும் பல சுக்கிலங்கள் ஒவ்வொரு சுரப்பி வழியாக சுக்கிலத்தை ஏற்றினால் மோட்சத்தில் ஒவ்வொரு படிகளை தாண்டிய மாதிரி ஆகிவிடும். [டேய்! சுரப்பி என்னடா அகல்விளக்கா? சுக்கிலத்தை ஏற்றி எரிய வைப்பதற்கு]5. etc., etc.,
இது போன்ற உத்தியில் இறங்கி பிரம்மச்சாரியத்தை கடைப்பிடித்து மோட்சம் அடைவது என்று டிசைட் பண்ணி பால் ஈல் எல்லாம் வாங்கி ரெடியாக இருந்த போது தான் நான் கேள்விப் பட்ட ஒரு நிகழ்ச்சி என்னை உலுக்கி வைத்தது. அது தான் விவேகானந்தர் இறப்பு பற்றிய செய்தி. விவேகானந்தார் சுக்கிலத்தை ஆயிரம் இதழ் கொண்ட கபாலத்தில் ஏற்றி வைக்கும் போது மூக்கு வழியே இரத்தம் வந்து செத்துப் போனார் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான். இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தான் என்னுடைய சுய அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அதாவது சுக்கிலத்தை ஏற்றும் போது விவேகானந்தருக்கு மூக்கில் இரத்தம் வந்த மாதிரி சுக்கிலம் பைபாஸ் ஆகி மூக்கு வழியாக வந்து விட்டால் என்ன செய்வது? எல்லாரும் பாலை அப்படியே உரிய ஆரம்பித்தால் கட்டாயம் ஸ்ட்ரா தட்டுப்பாடு வரும். ஸ்ட்ரா உற்பத்தியாளர்களின் பொருளாதார சரிவுக்கு நான் காரணமாகி விடக்கூடாது என்று உள்ளுருத்தால் தினம் தினம் என்னை கொல்ல ஆரம்பித்தது நான் பிரம்மச்சாரிய விரதத்தை கைவிடலாம் என அப்போதே உத்தேசித்து விட்டேன். இன்னொரு நண்பன் விவேகானந்தர் ஆஸ்துமாவால் தான் முக்தியடைந்தார் என ஆயிரம் தடவை என்னை தட்டிச் சொல்லியும் அந்த சுக்கில மேட்டர் இன்னும் என் cereberal-லிருந்து நீங்கவில்லை.
என்னுடைய அடுத்த தேடல் ஹிப்னாடிஸத்தை பற்றியது. பன்னிரெண்டாம் வகுப்பு வந்த பிறகு ஸ்கூல் பெண்களை வசியம் பண்ண வேண்டியது அக்காலக்கட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று. திரும்ப கைக்கொடுத்தது பாளை மத்திய நூலகம். “ஹிப்னாடிசம் செய்வது எப்படி?” என்பதை மெர்வின் முதல் கடம்பூர் கணேசன் எழுதிய அனைத்துப் புத்தகத்தையும் படித்தாகி விட்டது. யாருமே ஹிப்னாடிசம் செய்வதை மட்டும் சொல்லித்தரவில்லை. ஹிப்னாடிசம் பயிற்சி செய்தால் சொக்குப் பொடு போடலாம் மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கலாமென கீறல் விழுந்த ரெக்கார்ட்டு மாதிரி பல பக்கங்களுக்கு விவரித்திருந்தார்களே தவிர ஹிப்னாடிசம் என்றால் எப்படி செய்வது என்பதை கடைசிக்கு முந்திய பக்கம் வரை சொல்லவில்லை. கடைசி பக்கத்தில் சுவற்றில் ஓம் என்பதை ஹிந்தியில் வரைந்து வைத்து வெறித்து வெறித்து இமைக்காமல் பார்த்தால் ஹ்ப்னாடிய சக்தி வசப்படும். அதற்கு திடமனமும், அழகிய கண்களும், வசிய சங்கல்பத்தை 1000000 தடைவை மூளையில் லூப்பில் ஓட வைத்தால் ஒரு வேளை வெற்றிக் கிடைக்கலாம் என்று சொல்லியிருந்தது. அது முயற்சி செய்வதென துணிந்து வெள்ளை சுவரில் கரியில் ஓம் வரைந்து கண்ணில் நீர் முட்ட முட்ட பயிற்சி செய்து பானுப்பிரியா மாதிரியான என் முட்டைக்கண் கூமுட்டை ஆகி அரவிந்த் ஐ ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். போனசாக என் அப்பா என்னை நைய நைசாக புடைத்தார் சுவரில் கிறுக்கியதற்காக.
ஹிப்னாடிச பயிற்சியை பாதியில் விட்ட எபெக்டோ என்னமோ எந்த பொண்ணும் என் பார்வைக்கு மடங்கியதேயில்லை.
அடுத்த தேடல் மன அமைதியை குறித்தது. அவதார புருஷர் கல்கி பகவான் எனக்கு மன அமைதியை போதித்து கேட்டதை கேட்டபடி கிடைக்க வழி செய்வார் என்ற நம்பிக்கை என் அம்மாவுக்கு ஆஸ்துமா அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரையிருந்தது. பக்கத்து வீட்டு சுனிதா கூப்பிட்டாள் என்பதற்காக என் அம்மாவும் மன அமைதியை தேடி கல்கி பகவனின் ஆலயத்தை அண்டினார். மூச்சை உள்ளிழுக்க சொன்ன கல்கி பகவான் இரண்டு நிமிடத்துக்கு மூச்சு விட மறந்து விட சொன்னார். ஏனென்றால் அப்போது தான் அவரை அண்டியவர்களுக்கு மன அமைதி அண்டுமாம். அம்மாவின் ஆஸ்துமா வியாதி அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்க நேர்ந்தது.
பிறகு யாரை பார்த்தாலும் கல்கி பகவானாகத் தான் காட்சியளித்தார்கள். நியூஜெர்சி நியூடு பாரின் வாசலில் இருந்தவனும் கல்கி பகவான் மாதிரியே காட்சியளித்தார். கொஞ்சநாளைக்கு முன் முளை விட்டு அருவடைக்கு தயாராகியிருந்த என் மீசையை பார்த்தும் நியூடு பார் கேட்டு(gate) கல்கி பகவானுக்கு நம்பிக்கை வரவில்லை. அன்று என்னுடைய வயதுக்கு ஐடி ப்ரூப் கேட்டது என் வாழ் நாளிலும் மறக்க முடியாது. ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாததால் இந்தியன் என்ற பெருமையோடு என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தேன். அப்போது தேசப்பக்தி எனக்கு பொங்கி வழிந்ததற்கு அளவேயில்லை. கேட்டு பகவான் என் மேல் எப்போதும் ஒரு பார்வையாகவே இருந்தார். அவனால் அங்கு நடந்த நடனத்தைக் கூட ரசிக்க முடியவில்லை. அதிகாலை மூன்று மணி வரை லேப்டான்ஸ்காக வெயிட் பண்ணியும் என் பெயர் கூப்பிடபடவேயில்லை. யாரை குற்றம் சொல்வது. என் தேசப்பக்திக்கா? கல்கி பகவானுக்கா? அந்த நியுடு பாரையா? இல்லை அந்த மன அமைதியையா?
அப்புறம் என் தேடலின் ஈர்ப்பில் கிடைத்தவர் வேதாத்திரி மகரிஷி தோற்று வித்த அறிவுத் திருக்கோயில்கள்.
“உலக சமாதானம்”
“தனி மனித அமைதியே ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதியே ஒரு சமுதாயத்தின் அமைதி, ஒரு சமுதாயத்தின் அமைதியே ஒரு நாட்டின் அமைதி நாட்டின் அமைதியே உலகத்தின் அமைதி”
போன்ற வேதாத்திரியின் தத்துவங்கள் என்னை கவர்ந்தது. வயசான காலத்தில் ஏதோ அவரால் முடிந்தததை அவரும் மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தார். முக்கியமாக பார்த்தால் எல்லா சாமியார்களும் (தத்துவஞானிகளும்) ஒரு கோஷத்தை உயர்த்திப் பிடித்துக் கொள்வார்கள் அதாவது மகரிஷியின் “உலக சமதான”த்தைப் போல. ஆனால் (ஒரு வேளை)நல்ல நோக்கத்தில் சொல்லிக் கொடுக்கப்படுபவைகளும் கைமாறிச் செல்லும் போது நோக்கம் மழுங்ககடிக்கப்படுகிறது, தனி மனித வழிபாடு கூடாது என்றுச் சொல்லிக் கொண்டே தனிமனித வழிப்பாட்டைச் சொல்லி கொடுக்கும் கூடாரங்களாக இருந்தது நான் அறிவுத் திருக்கோயிலில் மெம்பரான போது.
வயித்து வழியா மகரிஷி நினைத்துக் கொண்டு அவர் எழுதிய பாடலை பாடுங்கள். பாட்டு என்னவோ தூய தமிழ் தான். நல்ல கருத்து தான். வயித்து வலிக்கும் அந்த பாட்டுக்கும் சம்பந்தம். வாழ்க்கையில் கஷ்டமா மகரிஷியை நினைத்துக் கொள். வேலை கிடைக்கனுமா மகரிஷியை ஆழியாறில் போய் பார். ஆக மொத்தம் மகரிஷியே அந்த சமயத்தில் விரும்பாவிட்டாலும் அவரிடம் சேரும் ஒவ்வொருவருக்கும் அவர் தான் ஹீரோ. திரையில் ரஜினியைப் பார்த்து எதையும் செய்ய துணியும் சாதாரண (படிப்ப)றிவில்லாத ஒரு இரசிகனுக்கும் மகரிஷியின் சிஷ்யர்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமேயில்லை.
மகரிஷியின் சில டெக்னிக்குகளில் மனவளைக்கலையில் மௌனவிரதம் என்பது பிடிக்கும். காயகல்ப பயிற்சி என்பது இன்று வரை இன்னும் பிடிபடாத ஒன்று. குதத்தை இறுக்கி தளர்த்துவதால் விந்து எப்படி கெட்டிப்படும் அதனால் விளையும் மருத்துவ பயன்களுக்கு என்ன அறிவியல் ஆதாரம்? அவர் 98 வயது வரை காயகல்ப பயிற்சியால் தான் என்று அவர் சிஷ்ய கோடிகள் சூடம் அணைத்து சத்தியம் பண்ணுவது என் மரமண்டைக்கு சத்தியாமா ஒன்றும் புரியவில்லை. ஆதலால் அவரின் ஹீரோ இமேஜை என் மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டேன். மக்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
அன்று ஒரு நாள் என் துணைவியாருக்கு பயங்கரமான காய்ச்சல். வண்டியில் உட்கார்த்திக் அவர்களை டாக்டரிடம் கூட்டிப் போகும் போது வாந்தியால் அவதிப்பட்டார்கள். ரோட் சைடில் நிப்பாட்டி அவர்கள் உடம்பு நடுங்க வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் எதையும் செய்ய முடியவில்லை. வருகிறவர்கள் போகிறவர்கள் அந்த ரோட் சைட் நடைபாதையில் வந்துக் கொண்டும் போய் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரு வயது முதிர்ந்தவர் ஏறக்குறைய பிச்சைக்காரன் போல தோற்றம். எங்கள் அருகில் வந்தார். அவர் பிடித்து வைத்திருந்த கோக் பாட்டில் தண்ணீரை நீட்டினார். பேசியது இவ்வளவு தான் “பாட்டில்ல இருக்கிறது நல்ல தண்ணி தான். யூஸ் பண்ணிக்கோ. தயங்காதே”. கருணை நெஞ்சம் கை நீட்டும் போது ஹைஜினிக்காக என்னால் கொடி பிடிக்க முடியாது. நிச்சயம் அந்த நல்ல நெஞ்சத்துக்கு என்ன பெயரோ?
இன்றும் அவர் என் மனதில் ஹீரோ. இப்போவும் அந்த ஹீரோவை புகழ்வதால் எனக்கும், இரஜினி இரசிகர்களுக்கும், சாமியார் பக்த கோடிகளும் என்ன வித்தியாசம்???