நல்ல ஜோக் நீயுஸ் .
தலித்கள் தரிசனத்திற்காக நேரில் வரும் வெங்கடாசலபதி
திருப்பதி: தலித் மக்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக திருப்பதி வெங்காடசலபதி விக்கிரகத்தை கோவிலிலிருந்து தலித்
கிராமங்களுக்குக் கொண்டு செல்ல திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலை மலைப் பகுதியைச் சுற்றிலும்
உள்ள தலித் கிராமங்களுக்கு பெருமாளின் இந்த நேரடி விஜயம் நிகழுள்ளது. இதன் மூலம் திருப்பதி
கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடைபட்டுள்ள தலித் மக்களுக்கு நேரடியாக பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெருமாள் விக்கிரகம் நின்று செல்லவுள்ளது. இதனால்
ஒவ்வொரு தலித் மக்களுக்கும், பெருமாளை மனம் குளிர தரிசித்து, பூஜிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தலித் கோவிந்தம்
என்று இந்த பயணத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள்
நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத
அவலம்.இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின்
அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த
தலித் கோவிந்தம்.இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் நிலவி வரும்
மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.தலித் மக்களையும் சமூகத்தின்
அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம்
மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை
இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை
கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது.கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம்
நிகழ்ச்சி.வெங்கடாசலபதி மற்றும் அவரது இரு துணைவியரின் சிலைகளை தலித் கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு
செல்லவுள்ளோம். இதன் மூலம் ஜாதி துவேஷம் ஒழியும். அவர்களும் தங்களது இஷ்ட தெய்வங்களை நேரில் கண்டு
வணங்கி மகிழ முடியும். பார்க்கவே முடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் அவர்களின் மனச்சுமை இதனால்
குறையும் என்றார் அவர்.வழக்கமாக பெருமாளின் சிலை, திருமலை மாட வீதியில் மட்டுமே ஊர்வலமாக
கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக தலித் கிராமங்களுக்கு பெருமாள் விக்கிரகம் கொண்டு
செல்லப்படவுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணாச்சாரி தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக ஒரு தலித்
கிராமத்தை தேர்வு செய்து அங்கு தலித் கோவிந்தம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்தக் கிராமத்தை
அலங்கரித்து, பந்தல்கள் போடும் வேலை தொடங்கியுள்ளது. இதை தேவஸ்தானமே செய்கிறது.இந்தக் கிராமத்திற்குள் பெருமாள்
ஊர்வலம் நுழையும்போது திருமலை கோவிலில் செய்வதைப் போலவே வேத மந்திரங்கள் முழங்கப்படும்.கிராமத்தின் ஒரு
முக்கிய இடத்தில் மேடை அமைத்து அங்கு விக்கிரகம் வைக்கப்படும். இதன் மூலம் கிராம மக்கள்
அனைவரும் ஒன்றாக திரண்டு பெருமாளை வழிபட முடியும்.பெருமாள் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
வருமாறு அனைத்து வீடுகளுக்கும் திருப்பதி கோவில் பூஜாரிகள் நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர். அனைவருக்கும் லட்டு
பிரசாதம், இலவச உணவு ஆகியவையும் வழங்கப்படும்.இதில் ஒரு முக்கிய அம்சமாக, தீண்டாமைக் கொடுமைக்கு
பளார் அறை கொடுக்கும் விதமாக, தலித் மக்களுடன் இணைந்து, கோவில் பூஜாரிகளும், தேவஸ்தான அதிகாரிகளும்
, ஊழியர்களும் இணைந்து பிரசாதத்தையும், உணவையும், ஒரே தட்டில் சாப்பிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல இன்னொரு
புரட்சிகரமான திட்டத்தையும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் வைத்துள்ளது. அதற்கு மத்ஸ்ய கோவிந்தம் என்று பெயர்
. இது, மீனவர்களுக்கான வழிபாட்டு திட்டம். அதன்படி, மீனவர்களுக்கும், வழிபாடு நடத்துவது, மந்திரங்களை முழங்குவது ஆகியவற்றில்
தேவஸ்தானம் பயிற்சி அளிக்கிறது.பெருமாள் முன்பு அனைவரும் சமம் என்பதை அனைவருக்கும் உயர்த்தும் நோக்கத்தில்தான்
இந்தத்
Monday, 4 August 2008
Subscribe to:
Posts (Atom)