அன்பர்களே !
திரு மாறன் என்பவர் எழுதிய வெற்றி மாலை என்ற நூலிலிருந்து .....
முடிவெடுங்கள் :
-----------------------
வெற்றியாளனாக வேண்டுமென்றால் இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். எக்காரணத்தை
முன்னிட்டும் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.
தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போட்டு விடுங்கள். ஜப்பானியர்கள்
உயர் நிலையை அடைய முக்கிய காரணமாக அவர்கள் சொல்வது DO IT NOW - இப்பொழுதே
செய்து முடி என்பதே !
நாம் பெரும்பாலும் காரியங்களைச் செய்வதில் தாமதம் செய்து, சாதாரணமாக
முடிவெடுக்க வேண்டிய செயல்கள் தாமதமாகி, அவசரச் செயலாகவும், அவசரச்
செயல்களை மீண்டும் தாமதம் செய்து, மிக மிக அவசரச் செயல்களாக,
அரைகுறையாய்ச் செய்து முடிப்போம்.
எனவே முடிவெடுத்து விட்ட நிலையில் சிறிதும் தாமதிக்காமல் உங்கள்
செயல்களைச் செய்யத் திட்டமிடுங்கள்.
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை.
எனவே காரணங்களைத் தவிர்த்து காரியம் கைகூட இப்பொழுதே முடிவெடுங்கள்.
நட்புடன் ... சீனா