Thursday, 19 February 2009
இழந்த சொர்க்கம்
கி. பி. 1999, கணினி பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் நன்கு முயற்சி செய்தால், வாழ்க்கை முழுக்க வசந்த காலம் தான். எனவே எப்பாடுபட்டாவது, பார்கவியை இந்த வருடத்திற்குள் என்னை காதலிக்க வைப்பதென முடிவெடுத்தேன்.
"பார்கவி"....பொங்காமல் இருக்கும் "பொங்கல்" ...மன்னிக்கவும்...."எரிமலை". அவள் ஒரு அபாய வளைவு, பால் வீதியின் இருண்ட பகுதி, வரையறுக்க முடியாத கணிதம், சுருக்கமாக, "பார்கவி".
கல்லூரியில் இருந்து 40 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு நகரத்தை சேர்ந்தவள். ஊர் பெயர், கள்ளிப்பாடி. அவளுடைய ஊர் முழுக்க செம்மண் ரோடு தான். தார் ரோட்டை பார்க்கவேண்டுமானால், மாட்டு வண்டியை கட்டிக்கிட்டு எட்டு கல்லு தூரத்தில் உள்ள கூட்ரோட்டுக்கு வரவேண்டும்.
அவளின் அழகில் மயங்காத விரிவுரையாளர்களே இல்லை எனலாம். மாணவர்களை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. ஒரு சக மாணவன், அவளுக்கு காதல் கடிதம் எழுதினான். அவனுக்கு "பதில் கடிதம்" HOD இடமிருந்து வந்தது. இவன், அவன் என்று இல்லை. எவனாக இருந்தாலும், HOD இடம் போட்டு கொடுத்துவிடுவாள். ஆனால், அவளை தொந்தரவு செய்தால் மட்டும் தான் இப்படி. மற்றபடி MUTE போட்ட DVD போல இருப்பாள்.
இவளை தான் என்னை காதலிக்க செய்ய வேண்டும். Quite Difficult Task You Know?... Peter விட Warm Up செய்து கொள்கிறேன்.
சில உபாயங்களை வகுக்கிறேன். அதில் முதல் வழி, கவிதை எழுதி அதை அவளிடம் கொடுப்பது.
இரவு முழுவதும் சிந்தித்தேன், கண்ணில் பட்டது அனைத்தையும் கவிதையாக்க முயற்சித்தேன். எழுதி, எழுதி வீடு முழுக்க குப்பை ஆனது தான் மிச்சம். இருந்த குப்பைகளில், சுமாரான இரண்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு பார்கவியிடம் சென்றேன்.
பார்கவி, உன்னை பற்றி நான் இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல் என சொல்லிக்கொண்டே என்னிடம் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினேன்.
1. பார்கவி, நீ பார்த்ததனால், நானும் ஒரு கவி!!!
2. நீர்மூழ்கி கப்பலான நீ, கப்பலானால்.... நான், நீர்மூழ்கிப்போவேன்!!!!
படித்து விட்டு, அது சரி, கவிதைகள் எங்கே? என கேட்டாள். இப்பொழுது இது ஒரு மொக்கை ஜோக். ஆனால் அப்பொழுது எனக்கு சிரிப்பும், அழுகையும் சேர்ந்து வந்தது. கவிதை, வர வழியில் காக்கா தூக்கிகிட்டு போய்டுச்சி என்று என்னுடைய தன்மானத்தை விட்டு கொடுக்காமல் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டேன்.
கவிதை வழி, கேவலமாக முடிந்து விட்டதால், அடுத்த உபாயத்தை முடிவு செய்தேன். அது, பார்கவியின் உற்ற தோழியின் உதவியை நாடுவது.
அப்படி ஒருவள் இருந்தாள். அவள் பெயர், பவித்ரா. இங்கு பவித்ராவைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள்.அவள் புடவை கட்டினால் கொடி கம்பத்தில் துணி காய போட்டது மாதிரி இருக்கும். அவள் நடந்தால் சுமார் அறை ஏக்கர் நிலத்தை அவளுடைய புடவை பெருக்கி சுத்தம் செய்து கொண்டு போகும். கஞ்சி போட்டு மொரு மொருவென இருக்கும் புடவையின் Epicenter ல் பென்சிலால் கோடு போட்டது போல ஒல்லியாக இருப்பாள். அவளுடைய கண்ணாடி வழியாக நிலாவை பார்த்தால், நிலவில் இருக்கும் குளம் குட்டை கூட தெளிவாக தெரியும்.
பவித்ராவை பற்றி இப்படி வர்ணிக்கிற நான் அமீர் கான் மாதிரி இருப்பேன் என்று தவறாக நினைக்காதீர்கள். பவித்ரா கதை எழுதினால் தான் என்னுடைய லட்சணம் உங்களுக்கு தெரியும்.
அன்று காலை, பேருந்து நிறுத்தத்தில் பவித்ரா கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தாள். அவள் அருகில் சென்றேன், எப்படி ஆரம்பிப்பது...ஒரு வழியாக முடிவு செய்து, இப்படி ஆரம்பித்தேன்., பவித்ரா, புடைவைல நீ ரொம்ப அழகா இருக்க.
முகத்தில் ஒரு சலனமே இல்லாமல் "ஓஹோ" என்றாள். ஏற்கனவே இப்படி தான் நினைத்துக்கொண்டு இருப்பாள் போல இருக்கிறது. பவித்ரா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்ல நினைத்தேன்...ஆனால் வந்த வேலைக்கு வேட்டு வைத்த மாதிரி ஆகிவிடுமே என அடுத்த கணையை தொடுத்தேன். பவித்ரா, நீ ஏன் Contact லென்ஸ் அணிய கூடாது? "இப்போ உனக்கு என்ன வேணும்?"
என சீறினாள். அடடா ஏதோ புரிந்து விட்டது போல இருக்கே, என நினைத்துக்கொண்டே, பவித்ரா, நீ எனக்கு ஒரு உதவி செய்யனுமே, பார்கவி கிட்ட என்னை பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லி.........
"என இழுத்தேன், "எடுத்து சொல்லி...."? என முறைத்தாள்... ஒன்னும் இல்லை நான் கிளம்பறேன் என சொல்லி விட்டு அங்கு இருந்து எகிறி விட்டேன். ஹும்.. ஒன்றுக்கும் உதவாத இவளை பற்றி ஒரு பத்தி Intro வேறு.
மூன்றாவது உபாயம், நேராக பர்கவியிடமே காதலை சொல்லி விடுவது...
யாரிடமும் பேசாத, பழகாத பார்கவி, என்னுடைய மூதாதையர்கள் செய்த புண்ணியத்தால், என்னிடம் மட்டும் சிரித்து பேச ஆரம்பித்து இருந்த நேரம்.
ஒருவேளை, பார்கவி என்னை காதிலிக்கிறாளா?. காதல் இருந்தாள் கண்களில் தெரியும் என்றான் என்னுடைய நண்பன். அப்படியா, இன்னைக்கி பார்த்துடறேன்.
அன்று பார்கவியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவளுடைய இரண்டு கண்களையும் உற்று நோக்கினேன். இடது கண் சற்று வீங்கி இருந்தது தான் தெரிந்தது. என்ன ஆச்சி பார்கவி Left கண் சிகப்பா வீங்கி இருக்கு. நேத்து நைட் Full லா என்னை பத்தி யோசிச்சிகிட்டு இருந்தியா? பின் விளைவுங்கள் பற்றி யோசிக்காமல் வாய் இப்படி உளறியது. உள்மனசில் HOD வந்து போகிறார்.
கோபமே இல்லாமல், "பூச்சி ஒன்னு கடிச்சிடுச்சி" என்றாள் கூலாக. எனக்கு தைரியம் வந்தது. அடச்சே அந்த அதிர்ஷ்டக்கார பூச்சியா நான் இருக்க கூடாதா என்றேன். அந்த பூச்சிய தொடைப்பத்துலையே அடிச்சி சாவ அடிச்சிட்டேன் என்றாள். இனிமேல் நாம் இங்கு இருக்க வேண்டாம் வாங்க அடுத்த Shot க்கு போகலாம்.
ஆண் மயில் தோகை விரித்து ஆடி அதனுடைய காதலியை மயக்கும் என கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் ஒரே Dance தான். அதை ஆடினால் எனக்கு பின்னால் பிணம் வந்து கொண்டு இருக்கிறதென எல்லோரும் நினைப்பார்கள். அதனால் Dance...No Chance...ஆகி விட்டது.
சரி...மீண்டும் கவிதையே எழுதி கொடுத்து விடலாமா....."கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று ஒரு சத்தம். என்னவென்று பார்த்தால், என்னுடைய மனசாட்சி என் மீது காரி துப்ப try பண்ணிக்கொண்டு இருந்தது... கவிதை யோசனையும் Cut.
இதற்கு நடுவில், நானும் பார்கவியும், நல்ல நண்பர்கள் ஆனோம். நான் என்ன சொன்னாலும் அவள் HOD யிடம் போட்டு குடுக்கவே இல்லை.
எப்பொழுதும் படிய வாரிய தலையோடு தான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் அன்று, Zig-Zag பின்னல் போட்டு இருந்தாள். என்னால் இதைப்பற்றி அவளிடம் கேட்காமல் இருக்கவே முடியவில்லை.
விரிவுரையாளர் ஏதோ சீரியஸ் ஆக விரிவாக எடுத்துரைத்துக்கொண்டு இருந்தார். நான் ஒரு துண்டு சீட்டில் இப்படி எழுதி பார்கவிக்கு அனுப்பினேன்...
National Highways போல இருந்த உன் கூந்தல்... கள்ளிப்பாடி பாதை போல ஆனதன் ரகசியம் என்ன?
இதை படித்து பார்த்தவள் என்னை பார்த்து சிரித்தாள். என் மனசுக்குள் மத்தாப்பு. அடுத்து எழுதினேன்...
"நாளை மாலை 5 மணிக்கு Computer Lab க்கு வரமுடியுமா? " திரும்பி பார்த்து கண்களால் சரி என்றாள்.....அன்று தான் என்னுடைய தலை தீபாவளி. எப்படியும் நாளை, என்னுடைய காதலை சொல்லி விடுவதென இருந்தேன்.
அடுத்த நாள், 4 மணிக்கே நான் Computer Lab ல் ஆஜர். 4:15, 4:30, 4:45 மணி ஓடிக்கொண்டே இருந்தது. 4:55, என்னுடைய இதயம் ஒழுங்கில்லாமல் துடித்து கொண்டு இருந்தது. 5:00, எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது. 5:15, பார்கவி இன்னும் வரவில்லை. 5:30, பார்கவி வந்து இருக்கவேண்டிய நேரம். 6:00, பார்கவி வரவேயில்லை. நொந்து போனேன். 7:00 மணி வரை காத்திருந்து விட்டு வீடு திரும்பினேன் அறை மனிதனாக.
மறுநாள், என் முன் பார்கவி. நான் பேசுவதற்கு முன், ஒரு துண்டு காகிதத்தை என் கையில்திணித்தாள். பிரித்து படித்தேன். "
சொர்கத்தை
|