Friday, 20 November 2009

நான் இரசித்த கவிதைகள்


இது கவிஞர் புதியவன் கவிதைகள்




கண்களில் தொடங்கி

கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...



இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...



முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...


சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...

 


உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...
?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............
?



-- 


நான் இரசித்த கவிதைகள்




என் நாட்குறிப்பை
நான் அறியாமல்
இரகசியமாய் திறந்த
அவள் நினைவை
பத்திரமாய் எழுதிவைக்கும்
காதல்.


கொஞ்சம் பொறு
என நான் ரோஜாவை எடுத்து நீட்ட
உன்னை விட அழகாய்
வெட்கத்தில் சிவக்க தெரியவில்லை
ரோஜாவிற்கு.


நீ என் உலகம் என்றேன்
நான்
ம்ஹூம் நீ மட்டுமே
என் உலகம் என்று
திணர வைக்கிறாய் நீ.


என் அருகே வராதே
என்கிறாய்
உன்னை கட்டிகொண்டு திரியும்
என் காதலை என்ன செய்வாய்


என்னை நான்
தொலைத்துவிட்டேன்
அது உன்னிடம் தான்
இருக்க வேண்டும்
கொஞ்சம் தேடிப்பார்த்து
சொல்லேன்.


முதல் சந்திப்பில்
மொளனத்தையே பதிலாக
தந்தாய்
ஆனாலும் உன் மனதில்
எழுந்த வார்த்தைகள்
கேட்கத்தான் செய்தது எனக்கு






--




நான் இரசித்த கவிதைகள்



இது காதல் கவிஞன் தபு சங்கரின் கவிதைகள்


சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்


சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வந்த பிறகுதான்
விழிக்கிறது இந்த வீதி


பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுபோன பயணசீட்டு
விதியில் கிடந்து புலம்பிகொண்டிருக்கிறது
பயணம் முடிந்ததை எண்ணி


துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு


உன்னை ஏன் இப்படி
காதலித்து தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழ்ந்தை போல


நீ தொலைப்பேசியில் எல்லாம்
முத்தம் தராதே
அது முத்தத்தை எடுத்துக்கொண்டு
சத்தததை மட்டும் எனக்கு தருகிறது



--