கொங்கு நாட்டு பக்கம் அம்மாவின் அம்மாவை அம்மாயி என்று அழைப்பது வழக்கம் . அது போல தான் என்னக்கும் அம்மாயி . எப்பவுமே என் அம்மா யின் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு . என் அம்மாயி என் அப்புச்சி (அம்மாவின் அப்பா)இய விட 7 அல்லது 8 வயது இளையவள் . என் அப்புச்சிக்கு உபசரிப்பதில் அவங்களை விட்டால் வேறு ஒருவர் கிடையாது . அப்புச்சி எப்பவும் அம்மையை திட்டி கிட்டே இருப்பார்கள் . இருந்தாலும் அம்மாயி சலிக்காமல் அப்புச்சி சாகும் வரை பார்த்து கொண்டார்கள் . எனக்கு என் அம்மையின் விறகு அடுப்பு ரொம்ப பிடிக்கும் . நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது அங்கே போஅவீன் அப்போது குளிர் காலங்களில் அவர்களின் விற்கு அடுப்பில் கருப்பு காபி காய்ந்து கொண்டு இருக்கும் . அதில்குளிர் காய்ந்து கொண்டேபட்ட கருப்பு காபி குடிப்பது ஒரு சுகமான அனுபவம். அந்த காலத்து மனுசங்களுக்கு உரிய எதார்த்தம் அம்மாயி வயசு கில்ழவிகளிடம் எப்பவும் இருக்கும் . என் அம்மையிடமும் அது நெறையவே இருக்கும் . என் அம்மாயி எப்பவும் காசு சம்பாதிக்கணும் அதை அப்படீயே சேமித்து அடுத்த தலைமுறைக்கு வேயக்கணும் இன்னு நினைப்பார்கள். அவர்களது சாப்பாடு கூட ஒரு பெரிய அளவில் இருக்காது . பழைய சோறும் தயிரும் இருந்தா பச்சை மிளகாய் கடிச்சு சாப்படை முடிச்க்கு வாங்க. வயக்காட்டில் கடுமையான வேலை இருக்கும் போது கூட அப்படி இருப்பார்கள் ரொம்பவும் கடின உழைப்பாளிகள் . அதனால் தான் இவளவு வயசிலும் ஓரளவு நல்ல ஆரோகியமா இருந்து வேலை செய்ய முடிஞ்சது . அம்மையின் ரத்த கொதிப்பு இக்கும் காரணம் என் சின்ன மாமாவின் இளவயது இறப்பு காரணமா இருந்து இருக்கும் இன்னு நினைக்கிறேன் . மாமா குடிச்சு போதையில் அலைவதை பார்த்து அவர்கள் ரொம்ப வருத்த படுவதி பார்த்து இருக்கிறேஅன் . அவர்களது இறப்பு என் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாய் என்னுகிறேஅன்.
ஏன் இன்னஆ என்னோட பிறப்பு மற்றும் வளர்ப்பு ஆகியவற்றில் அம்மையின் பங்கு என் அம்மா விக்கு அடுத்தது. அந்த காலத்து வழக்கு முறைகள் பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்களுடன் முடிஞ்சது இன்னு நேனைகிறேஅன் .
Monday, 26 January 2009
Subscribe to:
Posts (Atom)