Wednesday, 12 August 2009

மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும்



இருபால் நண்பர்களுக்கும் என் முதல் வணக்கம்,

உலகில் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு ஏக்கம் கண்டிப்பாக இருக்கும்.  இங்கே எனது நியாயமான ஏக்கங்கள் (இவைகளில் சில உங்களுக்கும் பொருந்தும்)

------------------------------------------------------------------------------------------------------------------------------

மழலையில் தவறவிட்ட முதல் அழுகுரல் ...
மறந்து போன திண்ணை விளையாட்டு ...

கொஞ்சி விளையாட இல்லாத தங்கை ...
கிடைக்காமல் போன அத்தை மகள் முத்தம் ...

வார்த்தைகள் இல்லாத மனக்கவிதைகள் ...
கிடைத்தும் நிலைக்காத நண்பர்கள் ...

துளிர்க்காத காதல் எண்ணங்கள் ...
வெட்டிக்கொள்ளவும், ஒட்டிக்கொள்ளவும் இல்லாத சொந்தங்கள் ...

இதற்கிடையில், எட்டா கனியாக அறிவியல் வளர்ச்சி ...
எதையுமே சுவாசிக்க இயலாமல் நான் ...

இறைவா !!!
மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் இவைகளை சுவாசிக்க ...

- காணல்தோழன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------