Thursday, 10 July 2008

எங்கே செல்லும் இந்தப் பாதை?- சுட்டது


இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?


திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?
“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?
உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?
இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு “தேசத்துரோகி”யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?
மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?
8 மணி நேரம் உழைப்பு - 8 மணி நேரம் ஓய்வு - 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.
இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.
இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.
அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.
அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.இப்படி ஒன்றா இரண்டா இச்”சமூக சேவகர்கள்” சந்திக்கும் இன்னல்கள்?எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…இரவாவது பகலாவது?சுதேசியாவது விதேசியாவது?தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.சம்பளத்தை விடவா சமூகம்?
இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?இவர்கள் மட்டும்தானா?உங்கள் கேள்வி நியாயம்தான்.
உண்மை.ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் “தியாகங்களுக்கு” ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.” ‘இரவு வாழ்க்கை’ குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கவில்லை.நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.
நம்மைப் பொறுத்தவரை ….நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.
ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.சபாஷ்.ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?
இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்தெரிந்திருக்கிறதோ இல்லையோ…ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.
வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.
இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.குடிக்கட்டும்…கும்மாளமிடட்டும்…இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்துகடவுள் பாதி - மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.
மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்செல்கிறார்கள்…..வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.
அதுதான்:முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்கொள்ளட்டும்.
சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோதுமிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்சமூகமே கற்பிக்கும்.
நன்றி: த சண்டே இந்தியன்

Wednesday, 9 July 2008

ஆடி மாச மூட நம்பிக்கை

கர்ப்பிணிகளை ஆட்டி வைக்கும் ஆடி!
முகூர்த்தங்கள் நிரப்பிக் காத்திருக்கும் வைகாசி, அடைமழை தந்து ஆசீர்வதிக்கும் ஐப்பசி, முப்பது நாட்களும் விசேஷமாய்க் கழியும் மார்கழி.. என ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு புகழ் சுமக்க, அவற்றுள் 'ஆடி' மட்டும் சவலைப் பிள்ளை!
ஆம். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது.. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்..' என்ற நம்பிக்கை!
'இப்போதெல்லாம் எங்கள் ஏரியாவில் ஆடியில் பிறக்க வேண்டிய குழந்தையை ஆனியிலேயே அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுகிறார்கள்' என்று சிவகங்கை வாசகி ஒருவர் தகவல் தர, அதிர்ந்து போய் அங்கு சென்று விசாரித்தோம்.
''ஆடியில குழந்தை பொறந்தா குடும்பத்துக்கு ஆகாதுனு பெரியவங்க சொல்வாங்க.. அதனாலதான்..'' என்று தயங்கியபடியே பேச ஆரம்பித்த ஈஸ்வரிக்கு ஆடி முதல் வாரத்தில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருக்க, ஆனி இறுதி வாரத்திலேயே சிசேரியன் செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
''வர்றவங்க, போறவங்கள்லாம், 'அடக் கடவுளே.. ஆடியிலயா பிரசவம்..?!' னு கேட்கக் கேட்க, எனக்கு ரொம்ப குழப்பமாகிடுச்சு. எனக்கு இது மூணாவது குழந்தைங்கிறதால 'உடல் பலவீனமா இருக்கு. ஆபரேஷன்தான் பண்ணணும்'னு டாக்டர் ஏற்கெனவே சொல்லியிருந்தாங்க. அதனால, மூணு நாள் முன்னயே சிசேரியன் பண்ணப் போறோம்'' என்றவர் தொடர்ந்து,
''மத்தவங்களுக்காகவாவது இதையெல்லாம் பின்பற்ற வேண்டியிருக்கு. இல்லைனா பின்னாடி ஏதாவது சின்ன பிரச்னைனாக்கூட, 'ஆடியில பொறந்தது வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுச்சு..'னு எம்புள்ளையத்தானே குத்தம் சொல்வாங்க..'' என்றார்!
புகைப்படம் மறுத்து பேச ஆரம்பித்த கவிதாவுக்கு ஆடி பற்றிய இந்த நம்பிக்கை தந்தது ஆயுளுக்கும் அழியாத சோகம்..
''நான் கர்ப்பமாயிருக்கேன்னு தெரிஞ்சப்போ, ஆடியில பிரசவ தேதி வர, அதனாலயே என்னை அபார்ஷன் பண்ணச் சொல்லிட்டாங்க என் மாமியார். நான் எவ்வளவோ சொல்லியும் என் கணவர் உட்பட யாருமே கேக்கல. அது எனக்கு தலைக் குழந்தை. அந்தப் பாவம்தானோ என்னவோ.. இதோட நாலு வருஷம் ஆச்சு. அதுக்குப் பெறகு என் வயித்துல குழந்தை தங்கல..'' என்று அதற்கு மேல் தொடர முடியாமல் தளர்ந்தார் அவர்.
இந்த நம்பிக்கை பற்றிக் கேட்டாலே கோபமாகிறார் சிவகங்கையைச் சேர்ந்த முருகன்.
''என் மனைவி ரெண்டாவது முறையா கர்ப்பமானப்போ, எங்களையும் 'ஆடியா..?'னு எல்லாரும் பயமுறுத்துனாங்க. ஆனா நாங்க அதையெல்லாம் சட்டையே செய்யல. என் பையன் ஆடியிலதான் பொறந்தான்.
அவன் பிறந்ததை விசாரிக்க வந்தவங்க பலரும் 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைச்சிடுமே..'னும், 'ஆடியில பெறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது'னும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாங்க. ஆனா, ஆண்டவன் அருளால எங்களுக்கு எந்தப் பிரச்னையும் எற்படல. ஆண் ஒண்ணு, பொண் ஒண்ணுனு அழகா, ஆனந்தமா இருக்கு எங்க குடும்பம்'' என்று அவர் சொல்ல.. அதை சந்தோஷமாக ஆமோதித்தார் அவர் மனைவி விஜயலஷ்மி!
''முன்கூட்டி சிசேரியன் செய்யச் சொல்லி வருகிற கர்ப்பிணிகளை எப்படித்தான் டீல் பண்ணுகிறார்கள் மருத்துவர்கள்?'' என்கிற கேள்வியுடன் சிவகங்கையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான டாக்டர் சொர்ணமீனாவை சந்தித்தோம்.
''ஆடியில பிரசவ தேதி வந்தாலே அந்த கர்ப்பிணி பெண்ணை விடவும் நாங்க-தான் ரொம்ப சிரமப்பட்டுப் போயிருவோம்'' என்று தொடங்கிய டாக்டர் குமுறித் தீர்த்தார்..
''ஆடி முதல் வாரத்துல 'ட்யூ டேட்' இருக்கறவங்க, ஆனி 28-ம் தேதியே, 'எப்படியாச்சும் குழந்தை பிறக்க வச்சுருங்க டாக்டரம்மா..'னு வந்து நிப்பாங்க. நான் திருப்பி அனுப்பிடுவேன். ஆனா, அவங்க வேற எங்கியாவது போய் சிசேரியன் பண்ணிக்கத்தான் செய்றாங்க. என்ன செய்ய?'' என்று வருந்தியவர், அடுத்துச் சொன்ன செய்தியில் 'ஆடி'த்தான் போனோம்.
''ஒருமுறை ஆடி 32 -ம் தேதி ராத்திரி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்திருக்கு. ஒரு ராத்திரி வலியை அடக்கிட்டா(?!) காலையில ஆஸ்பத்திரி போய்க் குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சவ, பல்லைக் கடிச்சிக்கிட்டு இருந்திருக்குறா. அதுல நீர் வத்தி, ரத்தப்போக்கு அதிகமாகி.. கடைசியில அவ பிழைச்சதே தெய்வச் செயல்னு ஆகிப் போச்சு!'' என்று சொல்லும்போதே அவரோடு சேர்ந்து நமக்கும் நடுங்குகிறது. தொடர்ந்த டாக்டர்..
''சிசேரியன்ங்கிறது தாய், சேய்னு ரெண்டு உயிருக்கும் சேதம் ஏற்பட்டுடக் கூடாதுங்கிற அக்கறையில கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறை. அதை இப்படி மூடநம்பிக்கைக்கான கருவியா ஆக்குறது மருத்துவ தொழிலுக்கு செய்ற துரோகம். தாயோட கர்ப்பத்துல 38 வாரங்கள் வளர்ந்தாத்தான் ஒரு கரு முழுமையான வளர்ச்சியடையும். இப்படி முன்கூட்டியே குழந்தையை வெளியில எடுத்தா மூச்சு விடறதுல பிரச்சனை, தொற்று நோய்னு குழந்தைக்கு பல சிக்கல்கள் ஏற்படும்'' என்று பாரத்துடன் முடித்தார்.
இந்த ஆடி நம்பிக்கை பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
****************************************************************************
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன், சென்னை:
''இதெல்லாம் மக்களால் உண்டாக்கப்பட்ட மூடநம்பிக்கைதான். சூரியன் கடகத்துக்கு இடம்பெயரும் மாதம் ஆடி. கடகம், ஆதிபராசக்தியின் வீடு. எனவே சூரியனும் சக்தியும் சேரும் இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நிர்வாகத் திறமையில் தேர்ந்து விளங்குவார்கள்..''
பி.என். பரசுராமன், ஆன்மிக நிபுணர், சென்னை:
''கந்தரலங்காரத்தில் வருகிற 'நாளென் செயும் வினைதான் என் செயும்..' என்கிற பாடல் என்ன சொல்கிறது தெரியுமா? 'எந்த ஒரு செயலையும் செய்ய நல்ல நாளையும் கெட்ட நாளையும் பார்க்க வேண்டாம்.. கோள்கள் ஏதேனும் செய்யுமோ என்று அஞ்சவும் வேண்டாம். இறைவனுடைய வல்லமையின் முன் அவை அனைத்துமே செயலற்றவை' என்கிறது.
'ஈசனின் திருவடியை வழிபடும் அடியவர்களுக்கு ஒன்பது கோள்களினாலும் ஒரு துன்பமும் இல்லை' என்கிறார் திருஞான சம்பந்தர். நாளையும் நேரத்தையும் பார்த்து பயப்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களை செய்வது வீணானது.''
*******************************************************************************

Tuesday, 8 July 2008

குஞ்சு பாப்பாக்கு போலர் கரடி veedio

http://www.youtube.com/watch?v=xZ6zJrnJNCo

வாழ்கையில் ஒரு நாள் பாகம் 1

இன்று ஒரு நல்ல நாள் . எப்படி இருக்கும் இந்த நாள் இன்னு எண்ணி எண்ணி பயத்துடன் வாழுவதை காட்டிலும் என்ன ஆகிவிடும் இன்னு சொல்லி மனோ பலத்துடன் வாழ பழகிக்கணும் அது தான் எப்பவும் நம்மை முன் நோக்கி வெற்றி பாதையில் அழைத்து செல்லும் . சில நேரங்களில் உடல் ஊனம் உள்ளவர்கள் மிக உயர்ந்த செயல்களை செய்து முடிப்பார்கள். அது அவர்களின் மனோபலம் எப்படி என்பதை எடுத்து காடடும்.

இன்று இளம் வயதினர் உயர்ந்த பதவிகளில் இருபார்கள் . அதிகம் சம்பாதிபார்கள் ஆனால் வாழ்கையில் ஒரு சின்ன ஏமாற்றம் இன்னா தாங்கும் சக்தி குறைவா இருக்கும். அதனால் தீய பழக்கம் நாடி செல்வார்கள் . அது அப்படீயே போனால் அந்த பழ காதுக்கு மாறி விடுவார்கள் . அதனால் வாழ்க்கை அனுபவம் என்பது வேறு தொழில் அனுபவம் என்பது வேறு. வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவபடால் மட்டுமே கிடைக்க கூடியது. பயப்படாமல் வாழ பழகுங்கள்.

குஞ்சு பாப்பா வீடியோகள்

http://ishare.rediff.com/filevideo.php?id=364457

Monday, 30 June 2008

விவசாயி பக்கம் படியுங்கள்

நான் ஒரு விவசாயி மகன் என்பதால் எப்பவும் அது சம்பந்தமா நான் நெட் இல்ல நெறைய தேடி படிப்பேன் . எப்பவும் ரெகுலர் வாசகன் ஆப் பசுமை விகடன் .
இங்க ஹிந்து நாளிதழ் ரேளைன்சே கேரளா பத்தி நல்ல ஆர்டிச்லே .
படீங்க
பிரெஷ் சோப்ஸ் ஹெல்ப் விவசாயி இன் கேரளா

Friday, 27 June 2008

குஞ்சுக்கு பாப்பா கதைகள்

http://siruvarpoonga.blogspot.com/

இந்த மேல உள்ள லிங்க் சொடுகின நெறைய குட்டி கதைகள் வரும் . இது குட்டி பாப்பாகளுக்கு சொல்லலாம் .

http://fleshcia.spaces.live.com/Blog/cns!AF9156EA3CC641BD!177.entry

இன்னும் ஒரு லிங்க் குஞ்சுக்கு பயன் உள்ளதா இருக்கும் .

Thursday, 26 June 2008

வலையில் சுட்டது பழமொழிகள்

“தனிமனித வழிபாடும், தலைவன் வழிபாடும் ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது”
--நா.கோவிந்தசாமி

“ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன”. ---கலீல் ஜிப்ரான்

பிழையே செய்ததில்லை என்று சொல்பவன் புதிதாக எதையும் முயற்சித்தவனில்லை.
~ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


நேற்று தொலைத்த என்னை இன்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன் நாளை நான் கிடைப்பேன் என்ற நம்பிக்கையில்
-ஓர் ஆட்டோ வாசகம்

ஒரு பாதி வாழ்க்கை தன் பெற்றோர்களால் நாசமாகிறது. மறுபாதி வாழ்க்கை தன் குழந்தைகளால் நாசமாகிறது.

If you cann't convince them, confuse them.
~Harry S தருமன்

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
-புத்தர்

சாமியார்களும் நானும் - சில கிளு கிளு தேடல்களும்

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டு. எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில் ஏற்றினால் கபால மோட்சம் கிடைக்குமென நூலக புத்தகங்கள் கூற ஆரம்பித்தன. சுக்கிலம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளவே “நான் ஏன் பிறந்தேன்” “நான் எப்படி பிறந்தேன்” ‘மாதிரி’யான புத்தகங்களை நூலகத்தில் தேட ஆரம்பித்தேன். ‘மாதிரி’ என்று ஏன் சொல்ல வந்தேனென்றால் “Reproduction organ” பற்றிய அனாடமி புத்தகமாக இருந்தாலும் அந்த வயதில் அது ஒரு ‘மாதிரி’ தான். பாளையங்கோட்டை நூலகத்தில் சைக்காலஜி பகுதியில் எவனும் சும்மா கூட தலைவச்சி படுக்கமாட்டான். ஆட்கள் அற்றுப் போன சைக்கலாஜி செக்ஷனில் அனாடமி புத்தகத்தை பதுக்கி வைத்து தினமும் அரைமணி நேரம் கால் கடுக்க நின்று அதே இடத்தில் படித்து சுக்கிலத்தை அறிந்துக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
பக்தி,சமய, தத்துவ புத்தகங்களை அலசி ஆராய்ந்ததில் அறிந்த சில விசயங்கள்:
1. விந்து போன்ற இனப்பெருக்கத்துக்கு உதவும் உடற்பொருட்களே ஆசையை தூண்டுகிறது. வழக்கம் போல் புத்தர் போட்டுத்தாக்கிய “ஆசையே துன்பத்திற்கு காரணம்”.2. சுக்கிலத்தை நாடி நரம்பின் வழியாக மேலேற்றி மேலேற்றி ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருத்தினால் சமாதி கிட்டும்.[உண்மையிலேயே சமாதி தான்]3. பிரம்மாச்சாரியம் என்பது ஆணுறுப்பு குழாய் வழியாக பாலை உறிஞ்ச வேண்டும். பிரம்மச்சாரிய சாமியார்கள் இதை அடிக்கடி செய்வார்கள் [என்னாங்கட! ஆணுறுப்பு என்ன அன்னப்பறவையாட பாலை மட்டும் உறிஞ்சி எடுப்பதற்கு]4. சில புத்தகங்கள் கொஞ்சம் சயிண்ட்டிபிக்காக சொல்ல வந்தது என்னவென்றால் உடம்பில் இருக்கும் பல சுக்கிலங்கள் ஒவ்வொரு சுரப்பி வழியாக சுக்கிலத்தை ஏற்றினால் மோட்சத்தில் ஒவ்வொரு படிகளை தாண்டிய மாதிரி ஆகிவிடும். [டேய்! சுரப்பி என்னடா அகல்விளக்கா? சுக்கிலத்தை ஏற்றி எரிய வைப்பதற்கு]5. etc., etc.,
இது போன்ற உத்தியில் இறங்கி பிரம்மச்சாரியத்தை கடைப்பிடித்து மோட்சம் அடைவது என்று டிசைட் பண்ணி பால் ஈல் எல்லாம் வாங்கி ரெடியாக இருந்த போது தான் நான் கேள்விப் பட்ட ஒரு நிகழ்ச்சி என்னை உலுக்கி வைத்தது. அது தான் விவேகானந்தர் இறப்பு பற்றிய செய்தி. விவேகானந்தார் சுக்கிலத்தை ஆயிரம் இதழ் கொண்ட கபாலத்தில் ஏற்றி வைக்கும் போது மூக்கு வழியே இரத்தம் வந்து செத்துப் போனார் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான். இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தான் என்னுடைய சுய அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அதாவது சுக்கிலத்தை ஏற்றும் போது விவேகானந்தருக்கு மூக்கில் இரத்தம் வந்த மாதிரி சுக்கிலம் பைபாஸ் ஆகி மூக்கு வழியாக வந்து விட்டால் என்ன செய்வது? எல்லாரும் பாலை அப்படியே உரிய ஆரம்பித்தால் கட்டாயம் ஸ்ட்ரா தட்டுப்பாடு வரும். ஸ்ட்ரா உற்பத்தியாளர்களின் பொருளாதார சரிவுக்கு நான் காரணமாகி விடக்கூடாது என்று உள்ளுருத்தால் தினம் தினம் என்னை கொல்ல ஆரம்பித்தது நான் பிரம்மச்சாரிய விரதத்தை கைவிடலாம் என அப்போதே உத்தேசித்து விட்டேன். இன்னொரு நண்பன் விவேகானந்தர் ஆஸ்துமாவால் தான் முக்தியடைந்தார் என ஆயிரம் தடவை என்னை தட்டிச் சொல்லியும் அந்த சுக்கில மேட்டர் இன்னும் என் cereberal-லிருந்து நீங்கவில்லை.
என்னுடைய அடுத்த தேடல் ஹிப்னாடிஸத்தை பற்றியது. பன்னிரெண்டாம் வகுப்பு வந்த பிறகு ஸ்கூல் பெண்களை வசியம் பண்ண வேண்டியது அக்காலக்கட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று. திரும்ப கைக்கொடுத்தது பாளை மத்திய நூலகம். “ஹிப்னாடிசம் செய்வது எப்படி?” என்பதை மெர்வின் முதல் கடம்பூர் கணேசன் எழுதிய அனைத்துப் புத்தகத்தையும் படித்தாகி விட்டது. யாருமே ஹிப்னாடிசம் செய்வதை மட்டும் சொல்லித்தரவில்லை. ஹிப்னாடிசம் பயிற்சி செய்தால் சொக்குப் பொடு போடலாம் மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கலாமென கீறல் விழுந்த ரெக்கார்ட்டு மாதிரி பல பக்கங்களுக்கு விவரித்திருந்தார்களே தவிர ஹிப்னாடிசம் என்றால் எப்படி செய்வது என்பதை கடைசிக்கு முந்திய பக்கம் வரை சொல்லவில்லை. கடைசி பக்கத்தில் சுவற்றில் ஓம் என்பதை ஹிந்தியில் வரைந்து வைத்து வெறித்து வெறித்து இமைக்காமல் பார்த்தால் ஹ்ப்னாடிய சக்தி வசப்படும். அதற்கு திடமனமும், அழகிய கண்களும், வசிய சங்கல்பத்தை 1000000 தடைவை மூளையில் லூப்பில் ஓட வைத்தால் ஒரு வேளை வெற்றிக் கிடைக்கலாம் என்று சொல்லியிருந்தது. அது முயற்சி செய்வதென துணிந்து வெள்ளை சுவரில் கரியில் ஓம் வரைந்து கண்ணில் நீர் முட்ட முட்ட பயிற்சி செய்து பானுப்பிரியா மாதிரியான என் முட்டைக்கண் கூமுட்டை ஆகி அரவிந்த் ஐ ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். போனசாக என் அப்பா என்னை நைய நைசாக புடைத்தார் சுவரில் கிறுக்கியதற்காக.
ஹிப்னாடிச பயிற்சியை பாதியில் விட்ட எபெக்டோ என்னமோ எந்த பொண்ணும் என் பார்வைக்கு மடங்கியதேயில்லை.
அடுத்த தேடல் மன அமைதியை குறித்தது. அவதார புருஷர் கல்கி பகவான் எனக்கு மன அமைதியை போதித்து கேட்டதை கேட்டபடி கிடைக்க வழி செய்வார் என்ற நம்பிக்கை என் அம்மாவுக்கு ஆஸ்துமா அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரையிருந்தது. பக்கத்து வீட்டு சுனிதா கூப்பிட்டாள் என்பதற்காக என் அம்மாவும் மன அமைதியை தேடி கல்கி பகவனின் ஆலயத்தை அண்டினார். மூச்சை உள்ளிழுக்க சொன்ன கல்கி பகவான் இரண்டு நிமிடத்துக்கு மூச்சு விட மறந்து விட சொன்னார். ஏனென்றால் அப்போது தான் அவரை அண்டியவர்களுக்கு மன அமைதி அண்டுமாம். அம்மாவின் ஆஸ்துமா வியாதி அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்க நேர்ந்தது.
பிறகு யாரை பார்த்தாலும் கல்கி பகவானாகத் தான் காட்சியளித்தார்கள். நியூஜெர்சி நியூடு பாரின் வாசலில் இருந்தவனும் கல்கி பகவான் மாதிரியே காட்சியளித்தார். கொஞ்சநாளைக்கு முன் முளை விட்டு அருவடைக்கு தயாராகியிருந்த என் மீசையை பார்த்தும் நியூடு பார் கேட்டு(gate) கல்கி பகவானுக்கு நம்பிக்கை வரவில்லை. அன்று என்னுடைய வயதுக்கு ஐடி ப்ரூப் கேட்டது என் வாழ் நாளிலும் மறக்க முடியாது. ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாததால் இந்தியன் என்ற பெருமையோடு என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தேன். அப்போது தேசப்பக்தி எனக்கு பொங்கி வழிந்ததற்கு அளவேயில்லை. கேட்டு பகவான் என் மேல் எப்போதும் ஒரு பார்வையாகவே இருந்தார். அவனால் அங்கு நடந்த நடனத்தைக் கூட ரசிக்க முடியவில்லை. அதிகாலை மூன்று மணி வரை லேப்டான்ஸ்காக வெயிட் பண்ணியும் என் பெயர் கூப்பிடபடவேயில்லை. யாரை குற்றம் சொல்வது. என் தேசப்பக்திக்கா? கல்கி பகவானுக்கா? அந்த நியுடு பாரையா? இல்லை அந்த மன அமைதியையா?
அப்புறம் என் தேடலின் ஈர்ப்பில் கிடைத்தவர் வேதாத்திரி மகரிஷி தோற்று வித்த அறிவுத் திருக்கோயில்கள்.
“உலக சமாதானம்”
“தனி மனித அமைதியே ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதியே ஒரு சமுதாயத்தின் அமைதி, ஒரு சமுதாயத்தின் அமைதியே ஒரு நாட்டின் அமைதி நாட்டின் அமைதியே உலகத்தின் அமைதி”
போன்ற வேதாத்திரியின் தத்துவங்கள் என்னை கவர்ந்தது. வயசான காலத்தில் ஏதோ அவரால் முடிந்தததை அவரும் மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தார். முக்கியமாக பார்த்தால் எல்லா சாமியார்களும் (தத்துவஞானிகளும்) ஒரு கோஷத்தை உயர்த்திப் பிடித்துக் கொள்வார்கள் அதாவது மகரிஷியின் “உலக சமதான”த்தைப் போல. ஆனால் (ஒரு வேளை)நல்ல நோக்கத்தில் சொல்லிக் கொடுக்கப்படுபவைகளும் கைமாறிச் செல்லும் போது நோக்கம் மழுங்ககடிக்கப்படுகிறது, தனி மனித வழிபாடு கூடாது என்றுச் சொல்லிக் கொண்டே தனிமனித வழிப்பாட்டைச் சொல்லி கொடுக்கும் கூடாரங்களாக இருந்தது நான் அறிவுத் திருக்கோயிலில் மெம்பரான போது.
வயித்து வழியா மகரிஷி நினைத்துக் கொண்டு அவர் எழுதிய பாடலை பாடுங்கள். பாட்டு என்னவோ தூய தமிழ் தான். நல்ல கருத்து தான். வயித்து வலிக்கும் அந்த பாட்டுக்கும் சம்பந்தம். வாழ்க்கையில் கஷ்டமா மகரிஷியை நினைத்துக் கொள். வேலை கிடைக்கனுமா மகரிஷியை ஆழியாறில் போய் பார். ஆக மொத்தம் மகரிஷியே அந்த சமயத்தில் விரும்பாவிட்டாலும் அவரிடம் சேரும் ஒவ்வொருவருக்கும் அவர் தான் ஹீரோ. திரையில் ரஜினியைப் பார்த்து எதையும் செய்ய துணியும் சாதாரண (படிப்ப)றிவில்லாத ஒரு இரசிகனுக்கும் மகரிஷியின் சிஷ்யர்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமேயில்லை.
மகரிஷியின் சில டெக்னிக்குகளில் மனவளைக்கலையில் மௌனவிரதம் என்பது பிடிக்கும். காயகல்ப பயிற்சி என்பது இன்று வரை இன்னும் பிடிபடாத ஒன்று. குதத்தை இறுக்கி தளர்த்துவதால் விந்து எப்படி கெட்டிப்படும் அதனால் விளையும் மருத்துவ பயன்களுக்கு என்ன அறிவியல் ஆதாரம்? அவர் 98 வயது வரை காயகல்ப பயிற்சியால் தான் என்று அவர் சிஷ்ய கோடிகள் சூடம் அணைத்து சத்தியம் பண்ணுவது என் மரமண்டைக்கு சத்தியாமா ஒன்றும் புரியவில்லை. ஆதலால் அவரின் ஹீரோ இமேஜை என் மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டேன். மக்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
அன்று ஒரு நாள் என் துணைவியாருக்கு பயங்கரமான காய்ச்சல். வண்டியில் உட்கார்த்திக் அவர்களை டாக்டரிடம் கூட்டிப் போகும் போது வாந்தியால் அவதிப்பட்டார்கள். ரோட் சைடில் நிப்பாட்டி அவர்கள் உடம்பு நடுங்க வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் எதையும் செய்ய முடியவில்லை. வருகிறவர்கள் போகிறவர்கள் அந்த ரோட் சைட் நடைபாதையில் வந்துக் கொண்டும் போய் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரு வயது முதிர்ந்தவர் ஏறக்குறைய பிச்சைக்காரன் போல தோற்றம். எங்கள் அருகில் வந்தார். அவர் பிடித்து வைத்திருந்த கோக் பாட்டில் தண்ணீரை நீட்டினார். பேசியது இவ்வளவு தான் “பாட்டில்ல இருக்கிறது நல்ல தண்ணி தான். யூஸ் பண்ணிக்கோ. தயங்காதே”. கருணை நெஞ்சம் கை நீட்டும் போது ஹைஜினிக்காக என்னால் கொடி பிடிக்க முடியாது. நிச்சயம் அந்த நல்ல நெஞ்சத்துக்கு என்ன பெயரோ?
இன்றும் அவர் என் மனதில் ஹீரோ. இப்போவும் அந்த ஹீரோவை புகழ்வதால் எனக்கும், இரஜினி இரசிகர்களுக்கும், சாமியார் பக்த கோடிகளும் என்ன வித்தியாசம்???