Wednesday, 13 January 2010

Fwd: வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான்
பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள்
முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி
நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என
அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு
குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது
என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன.
தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள்
செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம்
வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின்
வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த
ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும்
தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர
டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது
ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என
உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து
வந்தால் வாழ்க்கை செழிக்கும்

Wednesday, 6 January 2010

RED WARNINGS TO LIFE 1

1) Dont get panic for whatever reason it is.
2) Never say YES for everything. People will take granted once you practice 'YES' habit.
3) Learn to say NO and convince reasonably.
4) Know your abilities and disabilities.
5) Ask for extra time never feel you are the one can do everything in the World.
6) Learn to increase self confidence as much as possible.
7) If you can not do something please try to get out of the work ASAP.
8) Don't take voluntary responsibility yourself and get into trouble.
9) Consider your health when you are working overtime. Corporates pay nothing for loss of life or deteriorating life conditions due to over work.
10) Don't target un achievable targets in daily work life.

Thursday, 31 December 2009

WORDS FROM GREAT PEOPLE

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது! -

காரல் மார்க்ஸ்
 

விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை!

- பிரபாகரன்

 

இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!

- ஃபிடல் காஸ்ட்ரோ

 

 

Monday, 7 December 2009

புலிகளின் பின்னான அரசியல் சக்திகள்

inioru.com

 

Saturday, 21 November 2009

hfgh


Friday, 20 November 2009

நான் இரசித்த கவிதைகள்


இது கவிஞர் புதியவன் கவிதைகள்




கண்களில் தொடங்கி

கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...



இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...



முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...


சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...

 


உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...
?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............
?



--