Wednesday, 24 December 2008

ராஜீவ் கொலையாளியை நெருங்கிவிட்டோம்




ராஜீவ் கொலையாளியை நெருங்கிவிட்டோம்
Sunday, 12.21.2008, 08:50am (GMT)

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 

91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும்,  ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.

அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ  மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்'  எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன? சோனியா கேட்ட கேள்விகள் என்ன? அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்?  என அறிய முடியவில்லை. ஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், "நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட  பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம். இனி ரங்கநாத் பேசுகிறார்...

"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். புலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது. நான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு  `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.

பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா?' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா?' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார். வண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.

பிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்?' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.

அப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.

என் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர். நானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.

எனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப்  பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...

"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன். ஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம். நாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன். எல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன். 

அப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக. நான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).

இதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம். ஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது!'' என்றவரிடம்,

`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ன பேசினீர்கள்? உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்?' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.

"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.

டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன. காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.

முதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.

இரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.

நான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா?' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.

ஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.

இறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.    
   
பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.

இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே

--
     தமிழன் சிவா

            \\\///
          /         \
          | \\   // |
        ( | (.) (.) |)
---------o00o--(_)--o00o-----------------
********************************************************
>பணக்காரன் பின்னும் பத்துப்பேர்,
பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
>பணம் உண்டானால் மணம் உண்டு.
>பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
>பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
>பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்
********************************************************
------ooo0-------------------------------
     (   )     0ooo
      \ (      (   )
       \_)      ) /
               (_/





Monday, 22 December 2008

பெண் மற்றும் பலர்

இந்த வலை பதிவுகள் நல்ல ஒரு பெண் மற்றும் ஆண் ஆதிக்க நினைவுகள் பற்றியது என கொள்ளலாம் . படியுங்கள் நன்றாக இருக்கிறது.
http://vijisekar.wordpress.com/

வாழ்கை பிரச்சனை

வாழ்கையில் பிரச்சனை என்பது வறுமை, பசி, பட்டினி என்பது மட்டுமல்ல மனசுக்குப்பிடித்த நிறைவான சுதந்தரமான வாழ்கை இல்லாததும்தான்.

Thursday, 18 December 2008

♥ : இதை படிக்காதீர்கள்




" உலக வரலாறுலஎன்ன நீங்க படிக்கிறீங்க.. ஒரு இனத்தை ஒரு நாட்டை அழிக்கனுமா?..
 
ராணுவம் வேண்டாம்,குதிரை படை வேண்டாம்,யானைப்படை  வேண்டாம்,வில்லம்பு ஈட்டி வேண்டாம்,குண்டு வீசவேண்டாம், துப்பாக்கியெடுத்து சுட வேண்டாம், ஒரு உயிரைக்கொள்ள வேண்டாம், ஒரு துளி இரத்தம் இந்த மண்ணில் சிந்த வேண்டாம்..
பிறகெப்படி நாட்டை அழிப்பது.. அழிக்கலாம்: எளிது.
 
அவன் மொழியை அழித்துவிடு.!!
மொழியை அழித்துவிட்டால்... பன்பாடு கலாச்சாரம் வீழும், இணம் வீழும், நாடு அழியும்.!!
 
இதுதானே வரலாறு..

சொந்த மொழியை கற்காமல்,பேசாமல்,படிக்காமல் உலக வரலாற்றில் எந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை..

சொந்த மொழியினை முதலில் கற்றுத்தெளி.
பிறகு எந்த மொழியையும் படி.. எல்லா மொழியையும் படி.. வேண்டாமென்று சொல்லவில்லை.

உங்கள் வீடுகளுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவையோ.. அத்தனை ஜன்னல்களாக நீங்கள் உலக மொழிகளை வைத்துக்கொள்ளுஙள்.
நுழைவாசலாக இருக்கிற, "தலைவாசலாக" தமிழ் இருக்கட்டும்.

 
சமைக்கிற அரிசியில் இருக்கிற கல்லை எடுத்துப்பொறுக்கி தூரப்போடும் என் இனமே..  அதைபோன்று உன் உயிருக்கு நிகரான மொழியில் கலந்திருக்கும் பிற சொல்லை நீ நீக்கவேண்டாமா?"

என் மொழியை நான் பேசாமல், வேறெந்த நாய் பேசும் என்று ஒரு ஆதங்கம் நமக்குள் ஏற்பட்டால்.. எளிதாய் வென்றுவிடலாம்."
-
(இயக்குனர் அண்னன் சீமான் நேர்காணலிரிருந்து.)

'
இஸ்ரேல்' நாட்டை உருவாக்கும் முன் யூதர்கள் செய்த  காரியம் சிதைந்து  போன அவர்கள் 'ஹீப்ரு' மொழியை காப்பற்றியது தான்.

ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே.
ஆனால் தமிழ் என்பது 'அறிவு', மேலும் அதுவே நம் 'அடையாளம்' .
நாம் "அடையாளம்" இல்லாமல்  வாழக்கூடாது .!!

 

 

-------------
"
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.!"

 


Tuesday, 9 December 2008

Friday, 28 November 2008

தமிழன் என்றால் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் !


இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்க்கும் எவருக்கும் அதிர்ச்சியும் சிலருக்கு என் மீது வெறுப்பும் வரலாம். ஆனால் உண்மைகள் எப்போதும் ஒரு சிலருக்காயினும் கசப்பானதாகவே இருக்கும். பலரின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக ஒரு கருத்து வெளிபடுத்தப்பட்டால் கணக்கற்றோரின் கண்டனத்துக்கு அந்தக் கருத்தும் கருத்துக்கு உரியவரும் தண்டைனைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகளையும் மனித வரலாறு கண்டுள்ளது. அப்படித் தண்டனைக்கு உள்ளானவருள் சாரள்ஸ் டார்வினும் அவரது உயிர்களின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் இன்றும் மதவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பலரும் இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கண் கூடாகக் காணும் உண்மைகளாகும்.
இந்தியா டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற
செல்லாக்காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது
 
இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் அடைந்த காலம் ஒன்றாகவும் இரு  நாடுகளும் ஆங்கிலேயரின்

ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்

ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சில பொதுவான காரணிகள் இருப்பதை காணலாம். அடிப்படையில் இருநாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தில் விடுபட நினைத்தனவே அல்லது இரண்டு நாடுகளுமே ஜனநாயக ஆட்சி முறையில் ஆழமான நம்பிக்கையோ ஈடுபாட்டோ ஏற்படும் மனப்பான்மையோ கொண்டிருக்கவில்லை என்பதை இருநாடுகளிலும் உள்நாட்டு விவகாரங்கள் கையாளப்பட்ட விதத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.
 
இருநாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னால் ஆட்சித் தலைமையைப் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்த வகுப்பினரே பொறுப்பு ஏற்றனர். இவர்கள் ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும் கொண்ட கனவான்களாகவே இருந்துள்ளனர். அதனால் இவர்களுக்குத் தமது இனமும் வகுப்புமே உயர்வானவை என்ற நினைப்பும் தம்மை முடிசூடா மன்னர்களாக பாவனை செய்யும் மனப்பான்மையும் மிகுந்து இருப்பதைக் காணலாம். இந்தியா என்றால் இந்தி மொழியும் பிராமணியம் என்ற ஆரிய சிந்தனைப் போக்கும் மேலோங்கிய நிலையால் மகாத்மா காந்தியே விரக்தி கொண்டு விலகும் அளவுக்கு நேருவின் மேலாதிக்கம் இருந்துள்ளது. முகம்மது அலி ஜின்னாவின் மதவழி நாடு பிரிக்கப்படவும் நேருவே காரணம் என்பதை  வராலாறே பதிவு செய்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அம்பேத்கார் கூட மதச் சார்பின்மை என்று கூறிக் கொண்டே தமது மத நம்பிக்கை சார்ந்த புத்தமதச் சின்னமான தர்மச் சக்கரத்தையும் அசோகச் சக்கரவர்த்தியின் மூன்று சிங்கங்களையும் தேசியச் சின்னங்களாக்கிக் கொண்டார். இது பற்றிய தெரிவுக்குப் பரந்த அளவிலான விவாதமோ கருத்துப் பரிமாற்றமோ இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. தேசிய கீதம் கூட அந்நிய ஆட்சியாளரை புகழுவதாகவும் வங்க மொழியில் உள்ளது என்றும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன.

இலங்கையிலும் இது போன்ற நிகழ்வுகள்தான் இடம் பெற்றுள்ளன. இலங்கையின் அரசமைப்புக்கு எதிரான தமிழரின் பலத்த எதிர்ப்புகளை குறுக்கு வழியில் பதவிகளை இலஞ்சமாகக் கொடுத்து இரு தமிழ் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று பிரித்தானிய குடியேற்ற அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்ட 50க்கு 50 என்ற கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே டி.எஸ்.சேனநாயக்கா சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.சிங்கள இன மேலாதிக்க நிகழ்ச்சித் திட்டமாக அடுத்து இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது நேருவின் தலைமையில் இந்திய மத்திய அரசு எதனையும் செய்யாது நழுவிக் கொண்டது. பின்னர் நாடற்றவர்களாக்கப்பட்ட பல இலட்சம் தமிழரை ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா மீள் குடியேற்றத்துக்கு இணக்கம் தெரிவித்து ஏற்றுக் கொண்டது. அந்தத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய மீள் வாழ்க்கை என்ன?  அவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை. குறைந்த பட்சம் திபெத் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்காயினும் அவர்களுக்கு வசதிகள் கிடைத்துள்ளனவா?

(இந்தியாவில் சுமார் 75000க்கும் அதிகமான ஈழத் தமிழ் ஏதிலிகள் உள்ளனர். அவர்களுக்கு 103 முகாம்கள் உள்ளன. அவர்களின் வாழ்வு இப்படியான அவலத்தில் கிடக்கிறது)

 

இலங்கையில் சிங்களத்தின் இனஒதுக்கல் அரசியலுக்கு இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்தே முழு ஆதரவும் வழங்கியே வந்துள்ளது. அதன் தலையிடாக் கொள்கை என்பது இலங்கையின் இனவெறிக் கொள்கைக்கு பக்க பலமாக இருந்து வந்துள்ளது. சுயநலம் சார்ந்த ஒரு முன்னெச்சரிக்கையை அடிப்படையில் கொண்டதாகவே இந்தியாவின் இக்கொள்கையை கருதவேண்டியுள்ளது. இதற்கு இந்தியாவின் காஷ்மீரப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது. நேருவும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளரும் காஷ்மீரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்ககு வெளியாரின் தலையீட்டை தவிர்த்து வருவதைக் காணலாம்.  இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் விட்டுக் கொடாத மனப்பான்மையும் ஜனநாயக பாரம்பரிய வழி முறைகளை ஏற்காத தன்மையுமே என்பதை ஐ.நா.தீர்மானத்தை அமுலாக்க இணங்காமை காட்டுகிறது.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் காஷ்மீர் மீது உரிமை கொண்டாட முனைவதே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமையும் போர்களும் நிலவக் காரணமாக உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த ஐ.நா. காஷ்மீர மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படவேண்டும் எனத் தீர்மானம் எடுத்தது.இத்தகைய தீர்மானம் காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தானுடன் இணையவோ அல்லது தனியான சுதந்திர நாடாகவோ தீர்மானித்து விடலாம் என்ற அச்சம் என்றுமே இந்தியாவுக்கு உள்ளது. எனவேதான் இந்தியா இன்று வரை ஐ.நா. தீர்மானத்தை மிக ஆக்குரோசமாக எதிர்த்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நல்ல பிள்ளைபோல்  காஷ்மீரப் பிரச்சனை ஐ.நா. தீர்மானத்துக்கு அமையத் தீர்க்கப்படவேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் முதுகில் காஷ்மீரப் பிரச்சனை தீராத புற்று நோயாகச் சீழ்வடிந்து கொண்டிருக்கிறது.

இதுவே இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எதுவும் செய்ய முடியாத இக்கட்டில் மாட்டி விட்டுள்ளது. சிங்கள அரசு எந்த  வகையிலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக நடந்து கொண்டு வருகிறது. இந்தியா இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர் தலையில் சுமத்திவிடப் பல முறை முயன்று தோற்றுக் கொண்டேயிருக்கிறது.  இதே கண்ணோட்டத்தில் இந்தியா, ஈழத் தமிழர் விடயத்தில் சிங்களத்துக்கு இசைவாகவே நடந்து கொள்ள முற்படுகிறது. கொல்லப்படும் தமிழர் ஈழத்தவரோ இந்தியரோ என்ற பேதம் இந்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவராயினும் ஈழத் தமிழராயினும் சிங்களத்தின் கொலை வெறிக்குப் பலிகொடுக்க இந்திய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசில் தமிழகக் கட்சிகளின் கூட்டும் ஆதரவும் அவசியமாக உள்ளது. ஆனால் தமிழகத் தமிழரிடையே கொழுந்து விட்டு எரியும் ஈழத் தமிழர் பிரச்சினையால் எழுந்த உணர்வுகள் கட்டு மீறிப்போகும் நிலை தெரிகிறது. இதற்கு அணைபோடும் முயற்சியில் இந்திய மத்திய அரசு தமிழக காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தியும் சிறை செய்தும் கட்டுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க முயலுகிறது.

இந்திய மத்திய அரசின் இந்தக் கொள்கையானது இலங்கை அரசுக்கு மிக வசதியாக அமைந்துவிட்டது. இலஞ்சம் ஊழல் முலமும் பிரச்சார தந்திரங்களாலும் இந்தியாவை பயன்படுத்தியும் முன்னிறுத்தியும் உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வைத்தும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தும் கணிசமான சாதனைகளைப் படைத்து விட்டது உண்மையே. ஆயினும் தமிழர் தரப்பு ஏற்கும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை என்றுமே வைக்கும் நிலையில் சிங்களம் இல்லை என்பதே யதார்த்தம். இதுவே இந்தியாவுக்கும் பெரிய தலையிடியாக உள்ளது.

தனது பொம்மைகளாக நடக்கக் கூடிய டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற செல்லாக் காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது.இந்தப் பேரத்துக்குத் தடையாக இருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது படை வலுவும்தான். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைத்ததன் மூலம் புலிகளை அழித்து விட தவணை முறையில் தடை செய்து ஒழித்துக் கட்டிவிட இரண்டு இரண்டு வருடங்களுக்கு தடைசெய்து முயன்று வருகிறது.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனப் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில் புலிகள் இயக்கம் தனக்காகவும் தனது மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழரைப் பொறுத்த வரைக்கும் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் என்பதை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் இந்திய அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகள் வசதிகளை வைத்து எடை போடலாம்.

சுமார் 5232 திபெத்திய ஏதிலிகள் 22 பகுதிகளைக் கொண்ட ஒரு முகாம் உள்ளது. தாம் விரும்பியது போன்று வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அவர்களது கலாசாரப்படி ஓட்டு வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அனுமதி உண்டு. இன்னும் பலப்பல வசதிகள் வழங்கப் படுகின்றன.கீழே படங்கள் அவர்களின் கதையைச் சொல்லும் சொல்ப்படாத சலுகைகள் இன்னும் பல உள. பட்டியலிட்டால் பொறாமை உணர்வாகக் கொள்ளப்படலாம் என்பதால் அவை இங்கு தரப்படவில்லை.

 


-- 
   

            \\\///
          /         \
          | \\   // |
        ( | (.) (.) |)
---------o00o--(_)--o00o-----------------
********************************************************
>பணக்காரன் பின்னும் பத்துப்பேர்,
பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
>பணம் உண்டானால் மணம் உண்டு.
>பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
>பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
>பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்
********************************************************
------ooo0-------------------------------
     (   )     0ooo
      \ (      (   )
       \_)      ) /
               (_/

--~--~---------~--~----~------------~-------~--~----~

Friday, 14 November 2008

இந்த பெருசு ரொம்ப தான் உசாரு பாரு


நல்ல ஜோக் இன்னு எடுத்துக்கலாம் .

Sunday, 9 November 2008

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.

பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே,

குழந்தைகளின் தவறான வழிகாட்டலுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குழந்தைகள் சொல்வழி கேட்காமை, தாம் விரும்பியதற்காக அடம்பிடித்தல், அதைப் பெறுதல் என எதுவாகவும் இருக்கட்டும், கணவன் மனைவிக்கு இடையிலான வேறுபட்ட முடிவின் அடிப்படையில் தான், குழந்தைகளால் அது சாதிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமானதல்ல என்பது மிக முக்கியமானது. இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

குடும்பத்தினுள் உள்ள முரண்பாட்டையே குழந்தை பயன்படுத்துகின்றது. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு குழந்தை இதைப் பயன்படுத்த முடியுமா எனின், ஆம் என்பதே உண்மை. ஒரு வயது குழந்தை கூட இதை பயன்படுத்துகின்றது. இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிதானமாக அவதானமாக அணுகிப் பாருங்கள், அப்போது வெளிப்படையாகவே புரிந்து கொள்வீர்கள். கணவன் மறுக்கும் அல்லது மனைவி மறுக்கும் விடையத்தை, இதில் ஒருதரப்பு குழந்தைக்கு அதைப் பூர்த்தி செய்தால் என்ன நடக்கும்? விளைவு குழந்தையின் அதிகாரத்துக்குள் பெற்றோர் சென்றுவிடுகின்றனர். குழந்தை தான் விரும்பியதையே சாதிக்கும். குழந்தை பெற்றோரின் சொல்லைக் கேட்பதை மறுக்கின்ற பொதுவான நிலை உருவாகின்றது. ஆணும் பெண்ணும் தமது குழந்தை விடையத்தில், ஓரே விதமாக இணக்கமான ஒரே முடிவை எடுத்தல் அவசியமானது. இந்த சூழலில் தான் குழந்தை, பெற்றோரின் சொல்லைக் கேட்கும் இணக்கமான குழந்தையாக உருவாகும். சரி பிழையை விவாதிக்கும் இணக்கமான அறிவியல்பூர்வமான குடும்ப சூழல் உருவாகும். இது பொதுவாக இணக்கமாக நடப்பதில்லை. ஒரு பெண் தான் அடைய விரும்பியதை இணக்கமான வழிகளில் அடைவதில்லை. குறுக்கு வழியில்தான் அடைகின்றாள். குழந்தைகள் விடையத்தில் மட்டும் இது எப்படி சரியாக அமைந்துவிடும்.

இயல்பாகவே ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள சமூக உறவில், பெண் தனக்கு தேவையான ஒன்றை எப்படி சாதிக்க முனைகின்றாள். பெரும்பாலும் வன்முறை கொண்டது. தான் முன் கூட்டியே எடுத்த முடிவை, விவாதத்துக்கு இடமின்றி திணிக்கின்றாள். அது மொழி வன்முறை, அழுவது, கதைக்காமல் இருத்தல், பணத்தை தனியாக சேர்த்தல், என பல வழிகளில் இதை அடைகின்றாள். இப்படிதான் தான் எடுத்துவிட்ட முடிவை, அடைகின்ற வழியில் பெண்ணின் நடத்தை உள்ளது. தாய் போல் சேய் (குழந்தை) என்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் உள்ள குழந்தையும் கூட, இதே வழியைக் கையாளுகின்றது.

பொதுவாக ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்ற குடும்பச் சூழலில் ஆணின் முடிவு பெண்ணின் முடிவாக இருந்தது. இங்கு மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் உணர்வு சார்ந்து, ஒரு இயல்பான இணக்கம் இருந்தது. இன்று இந்த பொது இணக்கத்தை ஆணாதிக்க வரையறைக்குள் நின்றபடி, மறுத்து உருவாகும் புதிய சூழல். ஆணாதிக்கம் அங்கீகரித்து நிற்கும் போக்கு, ஜனநாயக மனப்பான்மைக்கே எதிரானது என்பதால், மாற்றுக் கருத்தை மறுக்கின்ற அதே எதிர்மனப்பாங்குடன் கூடிய அணுகுமுறை. இது தான் பெண்ணின் புதிய நிலை. அதாவது உலகமயமாதல் வீங்கி வெம்பி தள்ளும் தனிமனித உணர்வின் விம்பங்களாக பெண் பிரதிபலிகின்றாள். ஆணிடம் இருக்க கூடிய ஜனநாயக மனப்பாங்கு, பெண்ணிடம் அணுகுவதில்லை. இணக்கமற்ற விம்பங்களாக பெண் மாற்றப்படுகின்றாள். முதலாளித்துவ சூழலில் உருவாகும் பெண்ணிடம் இது குறைவாகவே காணப்படுகின்றது. முதலாளித்துவம் அல்லாத இரட்டைச் சமூகச் சூழலில் உள்ள பெண்கள், உலகமயமாதலால் கற்பழிக்கப்பட்டு சமூக இணக்கத்துக்கு எதிரானவராகவே உருவாக்கப்படுகின்றனர்.

இப்படி உருவாகும் பெண் ஆணின் மாற்றுக் கருத்தற்ற இணக்கத்தை, நிபந்தனையின்றி தரக் கோருகின்றாள். இதை அப்பெண் வன்முறை மூலம் பெற முனைகின்றாள். ஆணின் ஆணாதிக்க மேலாதிக்கத்தை அங்கீகரித்தபடி இது நடப்பது தான், இதில் உள்ள துயரம். ஆணின் மாற்றுக் கருத்தை தனக்கு எதிரானதாக கருதுகின்ற தன்மையே, பெரும்பாலான பெண்களிடம் காணப்படுகின்றது. இப்படித்தான் அனைத்துப் பிரச்சனைகளும் பெண்களால் அணுகப்படுகின்றது. பெண்ணால் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானகரமாக எடுக்கப்பட்டு, அவை மறுபரிசீலனையின்றி ஏற்கக் கோரப்படுகின்றது. இந்தத் தளத்தில், அதன் வழியில் தான் குழந்தைகளும் இணக்கமற்று வாழ்கின்றது.

இப்படி பொதுவான அணுகுமுறைகளில் உள்ள இணக்கமற்ற போக்கு, மொழி சார்ந்து பெண்ணினால் வன்முறைக்கு உள்ளாகின்றது. இதுவே உடல் சார்ந்த வன்முறையாக வளர்ச்சியுறுகின்றது. உடல் சார்ந்த வன்முறை, மொழி சாhந்த வன்முறையின் ஒரு நீட்சியாக இருக்காத போது, இந்த வன்முறை வேறுபட்டது. கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடல் என்பது, இயல்பாக இணக்கமாக நடக்க முடியாத சூழல் என்பது, அதன் தளத்தைப் பொறுத்ததே. மாறாக கணவன் அல்லது மனைவியின் செயல்கள் மீதான உரையாடல் வெளிப்படுத்தும் முரண்பாட்டில், எடுத்த எடுப்பிலேயே மொழி வன்முறை என்பது தவறான முடிவுகளையும் எதிர்மனப்பாங்கையும் உருவாக்குகின்றது. ஒற்றை முடிவைத் திணிக்கும் மொழி வன்முறை, தமக்கு இடையில் இணக்கம் காண்பதில் பாரிய பிரச்சனையாக மாறிவிடுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் உள்ள இணக்கமற்ற அணுகுமுறை கொண்ட முரண்பாடு, குடும்ப உறுப்புகளிடையே நஞ்சிடுகின்றது. இந்த நஞ்சிடும் அணுகுமுறை தான், பெற்றோருக்கு கட்டுப்பட மறுக்கும் பெரும்பாலான குழந்தைகளின் உருவாக்கத்துக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அக்குழந்தைகள் தாய் தந்தையின் முரண்பாட்டில் இருந்தே, தனக்கு சாதகமான கூறைப் பயன்படுத்திக்கொள்கின்றது. இப்படி பெற்றோருடன் முரண்பாடான மற்றொரு செயலை குழந்தை தொடங்க காரணமாகின்றது. இதை அந்தப் பெற்றோர்கள் உணர்வு பூர்வமாக உணருவதில்லை. பெற்றோர் இணக்கமாக தமக்கிடையில் முடிவை எடுக்கும் போது, குழந்தை முரண்பாடாக முடிவு எடுக்கமுடியாது. இந்த எதார்த்தம் குடும்பங்களில் உணரப்படுவதில்லை.

உண்மையில் குடும்பமே கடுமையான முரண்பாட்டினுள் சிக்கியிருப்பதை, அக்குடும்பம் தானாக உணர்வு பூர்வமாக உணருவதில்லை. இப்படி மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, வாழ்வை சுமையானதாகவும், ஏன் அதுவே புதிய முரண்பாடாகின்றது. வாழ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், இதன் விளைவையும் பொதுவான நச்சரிப்பு, புறுபுறுப்பு, சதா மற்றவரை குற்றம் காணுதல் அணுகுமுறைகளால் தீhக்கப்பட முடியாது. இதைவிட அன்பும் பாசமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியைத் தன்னும் உருவாக்கும். இதை ஒருதலைபட்சமாகத் தன்னும், குடும்பத்தின் ஒரு உறுப்பினராவது இதைத் தேர்ந்து எடுக்காத குடும்பத்தில் விளைவோ மிகக் கடுமையானது. சதா அனைத்துக்கும் சண்டை பிடிப்பதைவிட, விடையங்களை கண்டும் காணாமல் இருத்தல் கூட, குறைந்தபட்சம் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை தான். முரண்பாட்டையே வாழ்வாக கொண்ட குடும்பங்களின் நிலையென்ன?

1.மொத்தத்தில் வீட்டினுள் முழுக்குடும்பமுமே தனது மகிழ்சியை இழக்கின்றது. சதா சண்டையும் சச்சரவும் செய்கின்றதும், குற்றம் காண்பதும், குற்றம் தேடுவதுமாகி, மூஞ்சையை நீட்டிக்கொண்டு வாழ்வதுமாகி விடுகின்றது. பெருமளவிலான ஆண்கள் போதையில் திளைக்கின்ற நிலை. பொதுவாக ஆணும் பெண்ணும் தனிமை வாதத்தில் மூழ்கி குடும்பத்தின் மகிழ்ச்சியையே இல்லாததாக்குகின்றனர். தாம் ஒரு சமூகம் என்பதையே தாமாக மறுப்பதன் மூலம், எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

2.குறித்த ஆண்கள் தமது வீட்டில் இருக்கப் பயந்து, தப்பியோடுகின்றனர். பல ஆண்கள் வீட்டில் ஒரு மூலையில் அமைதியாகி விடுகின்றனார். முடிவுகளை எடுப்பதில் இருந்து தாமாகவே ஒதுங்கிவிடுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். பல ஆண்களின் வாழ்க்கை என்பது வெளியுலகமும், நண்பர் உலகமும், மற்றொரு பெண் என்று விலகிச் செல்லுகின்றது. சொந்த வீட்டை விடவும், மற்றொரு இடம் நிம்மதியானதாக அமைதியானதாக கருதுகின்ற நிலைமை உருவாகின்றது. பலர் இப்படி வாழ்வதும், பலர் இப்படி நினைப்பதும் நிகழ்கின்றது. ஆண்கள் பலர், வீதிகளில் பல மணி நேரம் தங்கி வாழ்கின்றனர். பலர் இதனூடாக மேலும் சீரழிகின்றவராக மாறுகின்றனர். மேலும் மேலும் அதிகமாக குடிக்கின்றனர் அல்லது புதிதாக குடிக்கப் பழகுகின்றனர்.

3. அநேக வீடுகளில் உழைப்பு முழுக்க பெண்ணின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக மாறிவிடுகின்றது. ஆண் சுதந்திரமாக பணத்தை மனைவியின் அங்கீகாரமின்றி பெற முடியாத சூழலை உருவாக்குகின்றது. வன்முறை கொண்ட அதிகாரமே ஆணைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் விளைவு, சில ஆண்கள் பணத்தை குடும்பத்துக்கு கொடுக்காது, மூன்றாம்தர வழிகளில் செலவு செய்கின்ற அளவுக்கு சீரழிகின்றனர்.

4. குடும்பத்தினுள் பாலியல் தேவை பூர்த்தியாகாது சிதைந்து, சமூக சீரழிவுகளை உருவாக்குகின்றது. தேவைகள் பூர்த்தியாகாது, அநாகரிகமான வழிகளில் அவை நாடப்படுகின்றது. குடும்பத்தில் முரண்பாடுகள் பாலியலிலும் பிரதிபலிக்கின்றது. அவர்களின் பாலியல் தேவை வெறும் சடங்காக மாறி, அதை வெறுப்பூட்டும் கூறாக்கிவிடுகின்றது.

5. கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பரம் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்பதை, அவர்களை அறியாது மறுதலிக்கப்படுகின்றது. இதேபோல் குழந்தைகள் கூட, தாய் அல்லது தந்தையின் சொல்லைக் கேட்க மறுக்கின்ற நிலை உருவாகின்றது. வீட்டில் குழந்தைகள் சொல் கேட்பதில்லை என்றால், அல்லது எதிர்த்து கதைக்கின்றனர் என்றால் அல்லது அடம்பிடித்து நிற்கின்றனர் என்றால், ஏன் அனைத்தையும் கொண்டு உள்ளனர் என்றால், உண்மையில் தாய் தந்தைக்கிடையில் இந்த உறவு இருப்பதே காரணமாகும். இது ஏற்படுவது என்பது, குழந்தைகளின் குற்றமல்ல. தாய் தந்தைக்கு இடையில் இது போன்று உள்ள நடைமுறையில் இருந்தே, பெரும்பாலான குழந்தைகள் இப்படி உருவாகின்றனர். தாய் தந்தையின் இணக்கமற்ற அணுகுமுறைகள், குழந்தைகளின் கட்டுப்பாடற்ற வாழ்வுக்கும், சீரழிவுக்கும் தூண்டுதலாகின்றது. இப்படியான வீடுகளில் குழந்தைகள் தமக்கு இடையில் கீரியும் பாம்பும் போல் சண்டைக்குள் மூழ்கின்றனர் அல்லது தனித்தனியாக மூலையில் ஒதுங்கி அமர்ந்துவிடுகின்றனர். தாய் தந்தை என, வீட்டில் இரண்டு மூலையில் நின்று ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகம் கட்டமைப்படுகின்றது. தாய் தந்தை இயல்பாகவே குடும்ப சூழலில் கதைத்து தீர்க்க முடியாத முரண்பாட்டை, குழந்தைக்கு முன்னால் வைத்துக்கொள்வதே அடிப்படையில் தவறானது. இது புரிந்து கொள்ளப்படுவதில்லை.

6. இப்படிப்பட்ட குடும்பத்தில் வெளியுலகம் நிம்மதியானதாகவும், குடும்ப உறுப்புகள் என்பது எதிரத்தன்மை கொண்டதாக காண்பதும், குடும்ப அங்கத்தவர் இடையேயான ஒரு உணர்வாக மாறிவிடுகின்றது. வாழ்வு பற்றி விசித்திரமான அலங்கோலமான பிறழ்ற்சி உருவாகின்றது. உதாரணமாக பெரும்பாலாக வீதியில் நிற்கும் குழந்தைகள், வீட்டுக்கு வெளியில் இருப்பதை விரும்புகின்றமைக்கான காரணம், உண்மையில் வீடு நிம்மதியாகவில்லை என்பதேயாகும். குழந்தை மீது குற்றம் கண்டுபிடிப்பதும், சதா அவர்கள் திட்டித் தீர்ப்பதும், படி படி என்று சதா நச்சரிப்பதும் திட்டுவதும், சதா வீட்டு வேலை வாங்குவதும் போன்ற பல காரணங்கள், குழந்தையை வலிந்து வீட்டுக்கு வெளியே விரட்டுகின்றது. இதன் பின்தான் வீதி பல தவறான விடையத்தை, அக்குழந்தைக்கு விகாரமாகவே கற்றுக்கொடுக்கின்றது. குழந்தைகளை சதா குறை காண்பது அல்லது எதையும் கண்டுகொள்ளாது ஒதுங்கி கிடப்பது என்ற, எதிரத்தன்மை வாய்ந்த ஒரு சூனியம் உருவாகின்றது. இப்படி குடும்பங்களில் குழந்தையுடன் உரையாடல் நடப்பதில்லை. உத்தரவுகளே பெரும்பாலும் போடப்படுகின்றது அல்லது அனைத்துக்கும் பொதுமையாக தலையாட்டுவது நடக்கின்றது. உத்தரவுகளும் அதிகாரமுமற்ற குடும்ப சூழலை உருவாக்க முடியாத குடும்பங்கள் அல்லது எதற்கும் லாயக்கற்ற ஆமாச்சாமிகளாக இருத்தல், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கூட இதுவே உரையாடலாக அமைகின்றது.

இப்படி பற்பல பக்கம் உண்டு. இணக்கமான வகையில் குடும்பத்தின் சூழலை சரிசெய்தல் மிக முக்கியமானது. இருப்பதைக் கொண்டு அழகாக மகிழ்ச்சியாக வாழ்தல் அவசியமானது. குடும்பத்தின் ஒரு உறுப்பு பற்றி மறுதரப்பு இணக்கத்தை அடைய முடியாது என்று கருதினால், பிரிந்துவிடுவது சிறப்பானது. அல்லது தனது பக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கவும் சூழலை சரிசெய்யவும் தெரிந்து கொள்வது அவசியமானது. மகிழ்ச்சியற்ற சூழலை தனக்குள் கற்பித்துக் கொண்டு, யாராலும் மகிழ்ச்சியாக வாழமுடியாது. மற்றவனை திட்டுவதால் அல்லது குறை காண்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மகிழ்ச்சி என்பது தான் அல்லாதவர் மகிழ்ச்சியில் பங்குகொள்வது மூலம் தான் சாத்தியம். முதலில் தனக்குள் தான் மகிழ்ச்சியாக வாழ்தல் அவசியமானது. இயலாமை, இல்லாமை என எதுவாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு போராடக் கற்றுக் கொள்ளுதல் அவசியமானது. இதன் மூலம் தான், தானும் மற்றவர்களும் எந்த நிலைமையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

பி.இரயாகரன்
09.07.2007

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

தொடரும்

Friday, 7 November 2008

அமெரிக்க அணு ஒப்பந்தக் கூத்து

1917-அக்டோபரில் ருசியப் புரட்சி ஒரு நடை முடிந்து, இன்னொரு நடை போட எத்தனிப்பு கொண்டிருந்த நேரம்; புரட்சியின் பிறப்பிடமான பெத்ரோகிரேத் மீது, உள்நாட்டு துரோக சக்திகளும், வெளிநாடுகளின் முதலாளித்துவ சக்திகளும் கரம் கோர்த்துப் பாய்ந்து கொண்டிருந்தனர். 1918 -சனவரியின் பனிக்கால பெத்ரோகிரேத் பயங்கர சம்பவங்களை எதிர் நோக்கி நின்றது.

1918-சனவரி

``வல்ஹோவ் நீர் மின் நிலையத்தை உடனே கட்டி முடிக்க வேண்டுமென விளாதிமீர் இலீச் (லெனின்) விரும்புகிறார். சில தினங்களுக்குள் மதிப்பீடு வரைந்து தரும்படி கோருகிறார்.''

சாதாரண காலத்திலேயே, ஜார்ருசியா வேண்டாம் என்று கைவிட்ட, பிரம்மாண்டமான நீர்மின் நிலையத்தை, உள்ளேயும் வெளியிலும் ஆபத்து சூழ்ந்த காலத்தில் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதை பொறியாளர் கிராப்தியோ அறிந்திருந்தார். மின்னாற்றலின் முக்கியத்துவத்தை லெனின் உணர்ந்தது போல மற்றவர்களும் உணர வேண்டுமெனும் பேரவாவுடன், வெகுகாலத்துக்கு முன்பே மறக்கப்பட்டு விட்ட வல்ஹோவ் கிராப்தியோ, மன எழுச்சியோடு கையிலெடுத்தார்.

``பல இடங்களிலும் மின் நிலையங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் எங்களுடைய தொழில்துறை முழுவதையும் மின்மயப்படுத்த நாங்கள்  திட்டமிட்டுள்ளோம். இதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்படுமென எங்களுடைய பொறியாளர்கள் கூறுகின்றனர். மின்சார மயப்படுத்தலை முடிப்பதானது, சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை கம்யூனிச முறைக்கு மாற்றியமைக்கும் பாதையில் முதல் முக்கிய கட்டமாக இருக்கும்.''

-அமெரிக்க செய்தி நிறுவனத்தின் பெர்லின் நிருபர்,

``உங்கள் கருத்துப்படி ருசியாவில் கம்யூனிச கட்டுமானம் எப்போது முடிவடையும்?'' என்று கேட்ட கேள்விக்கு லெனின் இவ்வாறு பதில் தந்தார். புதிய சமுதாய கட்டுமானத்தில் வர்க்கப் போராட்ட முனைகளுக்கு அடுத்த நிலையில் மின்னாற்றலின் அவசியத்தை அவர் முன்னுணர்த்தினார். சோவியத்துகளின் எட்டாவது காங்கிரசில் மின் மயமாக்கல் அறிக்கையைச் சேர்த்தவர் அவர்தான்.

``தான் சொல்ல வேண்டியது என்ன என்பதை விவரித்த போது, கிளாடின் ஒளிவு மறைவு எதையும் வைத்துக் கொள்ளாது சொன்னார்:

``அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப் பின்னலின் பகுதியாக மாறுவதற்கு - உலகத் தலைவர்களைத் தூண்டுவது; முதலில் இந்தத் தலைவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு நமது அரசியல், பொருளாதார இராணுவத் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக, தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள், தொழில் வளாகங்கள், மின்சக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்க, பொறியியல், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள்.''
(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ்; பக் -14,15.)

மேற்காட்டிய இரண்டும் தனித்தனி நிகழ்வுகள்; வரலாற்றில் பதிவானவை.

ஒன்று - மனித வளத்தைப் பயன்படுத்தி இயற்கை வளத்தை சமுதாய வளர்ச்சிக்கு ஆக்குவது.

மற்றது - இயற்கை வளம் அழித்து, அதற்காக மனித உழைப்பாற்றலைச் சுரண்டி, முக்கியத் தலைவர்களைக் கைப்பிடியில் அடக்கி லாப வேட்டையின் ஆடுகளங்களாய் நாடுகளை மாற்றுவது.

தொழில் நுட்பங்களைக் கண்டு பிடிப்பதை ஒரு ஆய்வாக, தனித்துறையாக வளர்த்து, அந்த வலைப் பின்னலை உலகத்தின் மீது வீசி_கொள்ளையடித்தல், கொலை செய்தல், சுற்றுச்சூழலை நாசப்படுத்தல் என்ற பாதகச் செயல்கள் செய்ய கிளாடின், ஜான் பெர்கின்ஸ் போன்றவர்கள் பல ஆயிரம் டாலர் சம்பளம் பெற்றார்கள்.

கிளாடின், ஜான் பெர்கின்ஸ் போன்ற பொருளாதார அடியாட்கள் உலக முழுதும் ஆயிரக் கணக்கில் விதைக்கப்பட்டார்கள். இந்த விஷக்கிருமிகள் நாடு நாடாய்ப் பரவி, இதயத்திலேயே துளையிட்டன.

``எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே நச்சுக் கழிவுகளை (Toxins) மழைக்காடுகளினூடே, ஓடும் ஆறுகளில் கொட்டச் செய்தார்கள்; அவை திட்டமிட்டே விலங்குகளை, தாவரங்களை அழிப்பதோடு, பழம் பண்பாடுகளை, அந்த  மக்களைக் கூட்டம், கூட்டமாகக் கொன்று குவித்தன; மருந்து நிறுவனங்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளிக்க மறுத்தன. மனிதர்களைக் கசக்கிப் பிழியும், ஆசியத் தொழிற்சாலைகளில் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத் தரப்பட்டது போன்ற கூலியைத் தருமாறு செய்தார்கள்.''

அவர்களுடைய அமெரிக்காவிலேயே பன்னிரண்டு மில்லியன் மக்கள் (1 கோடி 20 லட்சம்பேர்) அடுத்த வேளை உணவைக் குறித்து கவலை கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பு இது.

ஈராக்கில் போர் நடத்த அமெரிக்கா 87 பில்லியன் டாலர்கள் செலவிடுகிறது. ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதித்தொகையே போதுமானது. `நாற்பதாயிரம் கோடி டாலர் செலவிட்டால் போதும். இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம்'' என ஐ.நா மன்றம் (1998)_ல் சுட்டிக் காட்டியுள்ளது.

வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம், ஒரு தொழிற்சாலையோ, தொழிற்பூங்காவோ, மின் நிலையமோ, கணினிப் பூங்காவோ, நிறுவ கையெழுத்தாகையில், கிளாடினும், ஜான் பெர்கின்ஸும் நம் முன்னே வருகிறார்கள். அவர்களது வாசகத்தின் வழி நடந்துதான், அமெரிக்க _ இந்திய அணு ஒப்பந்தத்தின் மூடு கதவுகளைத் திறக்க முடியும். இந்தப் பின் புலத்தில்தான் பிரெஞ்சு அணு சக்தி ஒப்பந்தம், இனி செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள (20.10.2008) ருசிய அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவைகளையும் போய்த் தொட வேண்டும்.

இந்திய அமெரிக்க அணுமின் ஒப்பந்தத்தால் ஏற்படப் போகும் நலன்கள் எவையென ஆதரவுக் குரல்கள் கூறுவதை பட்டியலிட்டுக் கொள்வோம்.

1. கடந்த 10 ஆண்டுகளில் நமது மின் தேவை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலைகளின் உருவாக்கம், வளர்ச்சி காரணமாக மின் தட்டுப்பாடு நிலவுகிறது.

2. 2003_04_ஆம் ஆண்டுகளில் ஒரு நாள் மின் சக்தி நுகர்வு 99.4 கோடி யூனிட்டாக இருக்கும். இது 2012_ல், 207.1 கோடி யூனிட்டாக உயரும். ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

3. ஒரு டன் நிலக்கரி அல்லது எண்ணெய் தரக்கூடிய மின் ஆற்றலை, ஒரு கிராம் யுரேனியம் தந்து விடுகிறது.

4. 2100-ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைத்து எண்ணெய் வளங்களும் மின் உற்பத்தி ஆதாரங்களும் (நிலக்கரி போன்றவை) தீர்ந்து போய் விடுகிற வேளையில், அனுமின் உற்பத்தி மட்டுமே கை கொடுக்கும்.

5. சூரிய செல்களினாலும், இயற்கையான காற்றாலைகளினாலும் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றல் நம் நாட்டின் மொத்தத் தேவையையும் நிறைவு செய்யாது.

6. உள் நாட்டில் அதிவேக அணு உலைத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்வரை, வெளிநாடுகளிலிருந்து யுரேனியம் போன்ற அணுசக்தி எரிபொருட்களை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாதது.

7. அணுகுண்டுத் தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்குத் தரவிடாமல், இந்தியா தனது சனநாயகத்தைப் பேணிக் கொள்ளும் தன்மையை `ஹைடு' சட்டம் பாதுகாக்கிறது.

8. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அணு ஆயுதப் பரவல் தடை (NPT) காரணமாக, மறுக்கப்பட்ட `நேனோ' தொழில்நுட்பம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவைகளுக்கு மட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தம் எந்த நாட்டோடும் அணுசக்தி தொழில்நுட்ப உடன்பாட்டைச் செய்து கொள்ள கதவு திறக்கிறது.

9. சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களைத் தனித்தனியே வைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை நமக்களிக்கிறது.

10. ஆண்டொன்றுக்கு உலகெங்கும் 15000 பேர்களைப் பலி கொள்ளும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களோடு ஒப்பிட்டால், அணுசக்தி தொழிற்சாலை விபத்துக்கள் மிகவும் குறைவு.

11. இந்த ஒப்பந்தம் நமக்குச் சாதகமான வகையில் நம் நாட்டை அமெரிக்காவுக்கு அருகில் இட்டுச் செல்கிறது.

12. இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு எப்போதும் இல்லாமல் செய்ய அணுசக்தி ஒப்பந்தம் தேவை.

13. இது 300 மில்லியன் இந்திய மக்களையும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும். சாதிப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுதலை மட்டுமல்லாமல், நகர்மயமாதல், கிராமங்களை அலட்சியப்படுத்துதல், கல்லாமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரு கருவியாக இருக்கும்.

இதற்கு எதிரான வாதங்கள் உள்ளன. வாதங்கள் என்பதினும் எதார்த்த உண்மைகள் எனலாம்.

நம்முடைய வளங்கள், கனிமங்கள் உட்பட அனைத்து வளங்களும் நமக்கு அருளப்பட்டிருப்பவை. நமது வளங்களை, நம்முடைய மக்களுக்காக, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நமது தொழில்நுட்ப அடிப்படையில் பயன்படுத்துவது முதல் முக்கியம். இந்த நோக்கில் ஆய்வுகளை, அறிவியலாளர்களை, ஆய்வுக்கூடங்களை திருப்ப முடியும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில், பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கும் மக்களின் நலனுக்கும் என்ன தொடர்பு? அணுமின் சோதனைக்கூடத் தலைவர் பாபா முதல் அப்துல்கலாம் வரை இதற்குப் பதிலளிக்கவில்லை. மக்களுக்குத் தொடர்பில்லாத அல்லது எதிரான திட்டங்கள், செயல்கள் மூலம் கேவலங்களைச் சுமப்பது அரசியலாளர்களுக்கு சுகம் தருவது என்றால், அதே கேவலங்களை தாமும் தமது தலையில் சுமக்க, நமது அறிவியலாளர்களுக்கு அறிவு எங்கே போயிற்று? ஆனால் உலக முழுதும் பன்னாட்டு நிறுவனங்களில் நடைபெறுகிற ஆய்வுகள் அழிவுத் திறனை மேம்படுத்துதல் பற்றியே மையம் கொண்டுள்ளன. இது சமகால ஆய்வுக் கோட்பாடாகவே நிலவி வருகிறது. இந்தக் கோட்பாடுகளுக்கு உடன்பாடு கொண்டுவராதலால், அப்துல்கலாமும் இந்திய அணுமின்சக்தி ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளார்.

அபரிமிதமாய் குவிந்துள்ள நமது வளங்களை மனிதவளத்தைப் பயன்படுத்தி நமது பயன்பாட்டுக்கானதாய் ஆக்குவது சய சார்பு. இதில் இன்னொரு முக்கியமான கூறு_ நமக்கான பயன்பாட்டில் நம் கைவசமுள்ள தொழில்நுட்பம் போதுமானதாயில்லாத வேளையில், முன்னேறிய தொழில்நுட்பத்தை வேறு எங்கிருந்தும், எந்நாட்டிலிருந்தும் பெற்றுக் கொள்வது தவறில்லை. வல்ஹோவ் நீர் மின் நிலைய கட்டுமானத்தில் ஸ்வீடனிடமிருந்து சாதனங்கள், பெற்றுக் கொள்ளலை லெனின் செய்தார். பெற்றுக் கொள்ளல் என்பது கற்றுக் கொள்ளல், புதிய கற்றுக் கொள்ளலை கோடானு கோடி மக்களுக்குப் பயன்படுத்தல் என்ற பார்வையை அவர் தவற விடவில்லை.

மக்கள் பயன்பாட்டுக்கான புதிய புதிய தொழில்நுட்பங்களை நாம் கைவசப்படுத்த வேண்டும். எல்லாத் தொழில்நுட்பமும் வெளிநாட்டவர் பால் உள என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தால் அது முன்னேற்றம் போலத் தோன்றும்; முன்னேற்றமாகாது. குடைராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் முன்னாலே இருப்பவனைப் பிடிப்பது போல்தான் தோன்றும்; ஆனால் பிடிக்க முடியாது.

மக்களின் பயன்பாட்டுக்கான தொழில்நுட்ப அவசியம் என்ற புள்ளியிலிருந்து தவறுகிற போது, ஜான் பெர்கின்ஸ் சொன்ன எச்சரிக்கை உண்மையாகிறது. நமது அரசியல்வாதிகள், தொழில்நுட்பத்துக்குக் கடனாளியாவது மட்டுமின்றி அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு கடனாளியாகிறார்கள். அந்நிய ஆதிக்கத்திலிருந்து அவர்கள் மீண்டு எழவே முடியாமல் போகிறது. தொழில்நுட்பத்தை கையளிப்பது என்ற பெயரில், வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப் பின்னலை இந்திய அடிமைகள் மேல் அமெரிக்கா எனும் உலகப் பேரரசு வீசியுள்ளது.

ஆனால் உண்மைகள் வேறொரு திசையில் நின்று நம்மைத் துன்புறுத்துகின்றன.

இந்திய_அமெரிக்க அணு மின்சக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் மூன்று விழுக்காடு கூட நிறைவு செய்ய முடியாது? மூன்று முதல் ஆறு விழுக்காடு தேவையைச் சரி செய்யவே தத்தளிப்பாய் இருக்கும் என்பது முதல் உண்மை.

இன்னும் 20 ஆண்டுகள் கழித்தே இந்த அணு மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு வரும். கட்டுமானப் பணிகள் நிறைவேறி 2032-ஆம் ஆண்டில் முதல் உற்பத்தி தொடங்குகிறபோது இந்தியாவின் தேவை பல மடங்காக உயர்ந்து நிற்கும். இந்திய, அமெரிக்க அணுமின் ஒப்பந்தம் என்ற இந்தச் சிறு `லில்லிபுட்' மனிதனால், இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவை என்ற பிரமாண்ட அசுரனை வீழ்த்த வழி இல்லை.

நீர் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூபாய்-2. அனல் மின் நிலையம் வழி உற்பத்தியாகும் மின்சாரம் ரூபாய்-2.50. அணு மின்சாரம் யூனிட்டுக்கு 6 முதல் 7.50 வரை விற்கப்படும். இவ்வளவு அதிகமாய் விலை கொடுத்து, உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களின் விலையும் பல மடங்கு உயரும்.

`கதிர் வீச்சு' எனும் கொடிய ஆபத்து, இதுவரை உலகம் காணாதது. யுரேனியம் எரிபொருள் மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் டன் யுரேனியம் உலையில் வைக்கப்பட்டு, மின்னுற்பத்திக்குப் பின் புளோட்டானியமாக மாறுகிறது. இதுதான் அணுமின் உலையின் கழிவு. யுரேனியம் அணுமின் உலையில் எரிகிறபோது உண்டாகிற கதிர் வீச்சும், புளூட்டோனியக் கழிவும் ஆலையின் சுற்றுப்புறத்தை மட்டுமல்ல, நகரும், கண்டமும் தாண்டிய ஆபத்தைப் படர விடும். இந்த புளூட்டோனியக் கழிவுக்கு மரணமில்லை. ஆழ்கடலில் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் 45 லட்சம் வருடங்கள் வரை வீரியம் குன்றாது. வெப்பத்தைக் கொட்டும். பாறைகளுக்கடியில் மலையைக் குடைந்து புதைத்து விடலாம். ஒரு பூமி அதிர்ச்சி அல்லது நில நடுக்கம் ஏற்பட்டால் பூமியின் உயிர்களை, கடல்வாழ் உயிரினங்களை அழித்து பின்னும் கதிர்வீச்சு இயங்கிக் கொண்டே அலையும். எங்கெங்கே புல்பூண்டும், புழு, பூச்சிகளும், உயிர்களும் எதிர்ப்படுமோ, அவைகளையும் வாரி விழுங்கும். மனிதனும் விழுங்கப்படுவான்.

ருசியாவில் நிகழ்ந்த `செர்நோபில்' ஆலை வெடிப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்க நாட்டில் `லாங் ஐலெண்ட்' அணு உலைக்கசிவு இன்னொரு சான்று. அமெரிக்காவில் நடந்த இந்த உலைக்கசிவுக்குப் பின் (1985) அங்கு ஒரு அணுமின் உலையைக் கூட அமெரிக்க மக்கள் புதிதாகக் கட்ட அனுமதிக்கவில்லை. `வருமுன் காப்போம்' என்ற எச்சரிக்கைக்கு அமெரிக்க மக்கள் சாட்சியாக இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் எத்தனை எண்ணிக்கையிலும் அனுமின் உலைகளை நிறுவிக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

உண்மையில் `லாங் ஐலண்ட்' அணு உலையின் மையப் பகுதி முழுதும் உருகி, பெரும்பாலான பகுதி உலையின் அடிப்பகுதியிலேயே விழுந்து விட்டது. அப்போதும், ஆபத்தான அணுக் கதிர்கள் உலையின் சுவர்களைத் தாண்டி வெளியே வரவில்லையென்பதும், அந்தளவு பாதுகாப்பான சுவர்களைக் கொண்டிருந்தன எனக் கூறுவதும்; ஆனால் ஒரு அணு உலை எப்படி நிர்மாணம் செய்யப்படக்கூடாது என்பதற்கு செர்னோபில் ஒரு சான்று என்று காட்டுவதும் என்ன வகை வாதமோ தெரியவில்லை. உலகத்துக்கு அணு உலையே கூடாது என்பதுதான் தருக்க ரீதியாக சரியாக இருக்குமே தவிர, பாதுகாப்பாய் வாழும் உயிர்க்கொல்லி என்பது சரியாகுமா?

இந்த ஒப்பந்தம் நம்மை அமெரிக்காவுக்கு அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது ஒரு பெரிய வேடிக்கை. விசுவாசமுள்ள அடிமை எப்போதும் எஜமானன் பக்கத்திலேயே அமர்ந்திருப்பான் என்பது இதன் பொருள். அணு உலைகள் அமெரிக்காவின் நிரந்தரக் கண்காணிப்புக்கு உட்பட்டவை என்கிற விதி, அமெரிக்காவின் கையடக்கமான கூட்டாளியாக இந்தியாவை மாற்றுகிறது. (கி. வெங்கட்ராமன், தமிழர் கண்ணோட்டம். அக்டோபர்.) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, ராணுவ ஒத்துழைப்பு என்ற வகைகளில் கட்டுப்படுத்தி ஆட்டிப் படைக்கும் விதிகள் ஒப்பந்தத்தில் உள்ளன. அமெரிக்காவின் தோளுக்குச் சமமாக நிற்கும் வீரமகனாக அல்லாமல் அமெரிக்காவின் காலடியில் கட்டிப் போடப்பட்ட அடிமையாக இந்தியாவை ஆக்கியுள்ளது.

``ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது ; பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று அமெரிக்க அரசு `கவலை' கொள்ளுமானால், அந்தக் கவலையில் இந்திய அரசும் பங்கு கொள்ள வேண்டும். வடகொரியா குறித்தோ, வெனிசுவேலா பற்றியோ இவ்வாறு அமெரிக்காவிற்கு கவலை ஏற்பட்டால் இந்தியாவும் `கவலைப்' பட வேண்டும். இந்நாடுகள் மீது அமெரிக்கா படையெடுத்தால் இந்தியாவும் அதற்கு அடியாள் வேலை பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யாது போனால் அமெரிக்காவின் நலனுக்கு எதிரானது என்று கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை அமெரிக்காவிற்கு உண்டு. ஒப்பந்தத்தின் உறுப்பு 13 கூறுவது இதுதான்'' என்று கி. வெங்கட்ராமன் கூறுகிறார்.

இருபது ஆண்டுகள் கழித்து உற்பத்தி தொடங்கினாலும் இந்த அணுமின் ஆலையின் ஆயுள் 40 முதல் 50 வருடங்கள்தாம். இந்த ஆலை மட்டுமல்ல, லட்சக்கணக்கான டன் கல், சிமிண்ட், கம்பிகளால் கட்டுமானமான எந்த அணு உலையின் காலமும் அவ்வளவுதான். செத்துப்போன அந்த உலைக்குள் கதிர்வீச்சு மட்டும் சாகாமல் இருக்கும். பயன்படுத்திய யூரேனியத்தின் வீரியம் பாதியாகக் குறைவதற்கு 45 லட்சம் வருடங்கள் எடுக்கும். ஒட்டு மொத்தமாய் அதன் மேல் ஷ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தினும் பெரிதாய் ஒரு கோபுரம் கட்டி அதற்கொரு சமாதி எழுப்ப எவ்வளவு செலவு? எழுப்பினாலும் 500 ஆண்டுகளுக்கு மேல் அந்தச் சமாதி நிற்காது.

`எதிர்காலம் பற்றிய அனுமானங்களை மட்டுமே கொண்டு நிகழ்கால ஒப்பந்தத்தை அளவிடக் கூடாது' என்று அமெரிக்காவின் விசுவாச அறிவாளர்கள் கூறலாம். இப்படித்தான் அமெரிக்கா வாழ் தமிழரான கோ. ராஜாராம் அமெரிக்கச் சிந்தனை முறையின் ஊனமில்லாத கூட்டாளியாக ஆகியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் அணுகுண்டு சோதனை நடத்தும் வாய்ப்பு அடைக்கப்பட்டு விட்டது என்ற வருத்தம் இந்துத்துவா வாதிகளுக்கு. வல்லரசுக் கனவுகள் காங்கிரசுக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானதா? `இந்தியாவின் அணுவியல் தனிமை (Nuclear isolation) தகர்க்கப்பட்டுவிட்டது. அணுவியல் நீரோட்டத்தில் இந்தியா இணைந்து விட்டது' என்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் பா.ஜ.க.வின் முகமெல்லாம் அப்பிக் கிடக்கிறது.

ஒரு பகுதியில், அல்லது ஒரு வட்டாரத்தில், அல்லது ஒரு தேசத்தில் வாழும் மக்கள் அந்தந்தச் சூழலுக்குப் பொருந்த வாழ உரிமை கொண்டவர்கள். அந்தந்தப் பகுதி இயற்கை வளத்தை தேவைகளுக்கேற்ப பயன் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கானது. மலைவாழ் பழங்குடி மகனுக்கு இயற்கையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு வீடு அவசியம். சமவெளியில் வாழ்கிறவனுக்கும் அது அவசியம். நாலு தேக்குப் பலகைகள், பத்து விட்டங்கள், சில மூங்கில் கழிகள், சில கற்கள் போதும். ஆனால் அவனுடைய காட்டுவளம் அழித்து, வேறு எங்கோ, எவருக்கோ காடழித்து மரங்களும், பாறை உடைத்து கற்களும் கொண்டு செல்லப்படுகின்றன. (இப்போது வனத்தைக் கூறு போட்டு விற்கும், கொள்ளையரின் லாரிகளை மறித்து மலைச் சாலைகளில் மரங்களை, பாறைகளை குறுக்கே போடுகிறான். அவனுக்கும் வனக் கொள்ளையருக்கும் இடையில் ஒரு போர் நடக்கிறது.) மலையுடைத்து கல்குவாரிகளாக்கி கற்களை தங்கப் பாளங்களாய் தளம்பதிக்க மலையுடைத்து மார்பிள் கற்கள் எடுக்கப்படுகின்றன. (மலையோரங்களிலும் சுற்றுப்புறங்களிலும் வாழும் மக்கள் அனுமதியோம் என்று சாலை மறியல் செய்கிறார்கள்.) லாரி லாரியாய் மணல் கொள்ளையடிக்கப்பட்ட ஆறுகள், குடல் எடுத்த கோழிகள் போல் கிடக்கின்றன. (தங்கள் விவசாய நிலங்களில் நீர் ஆதாரம் அற்றுப் போவதாக லாரிகளைச் சிறைப்பிடிக்கிறார்கள் விவசாயிகள்) உலக மயமாக்கலின் ரூபமாக உருவாக்கப்பட்ட நீண்ட, அகல, பெரியசாலைகள், இன்று போராடும் மக்களின் அக்னிக் களங்களாக மாறி வருகின்றன. பிரச்னைகள் அடிப்படையில் வெடிக்கும் தன்னெழுச்சிகளுக்கு, இடைவிடாது தலைமையேற்று நடத்தி எடுத்துப் போகும் `வடிவான' இயக்கங்கள் இல்லை என்று நாம் உணர்வது போலவே அவர்களும் உணருகிறார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலமோ, பெரும் தொழிற்சாலைகளோ, `மெகா' திட்டங்களோ, எந்தப் பிரமாண்டத்தையும் மக்கள் அனுமதிக்கத் தயாரில்லை. தொழிற்பெருக்கமும், பொருளாதார வளர்ச்சியும் அவர்களுடைய வாசலில் எதையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மிகச் சிறிய கூட்டத்தினருக்கு பலனளிப்பதாக மாறுவதை கண்ணெதிரே பார்க்கிறார்கள். வாழ்வு நாசமும், வறுமையுமே தங்களுக்கு என்பதையும் உணர்கிறார்கள்.

பிற எல்லாத் திட்டங்களைப் போலவே அமெரிக்க அணு ஒப்பந்தக் கூத்தும், வெளிநாட்டு மூலதன நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் லாப வேட்டையைக் குவிக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இவை எல்லாவற்றையும் மறைத்து, இது இந்தியாவின் நூற்று மூன்று கோடி மக்களையும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, கல்லாமை போன்ற தீயவைகளையெல்லாம் அகற்றிவிடும் சர்வரோக நிவாரணி என்று கூச்ச நாச்சமில்லாமல் வாதிடுவதுதான், மேதமையின் உச்சமா?

`மக்கள் எவ்வழி, அரசு அவ்வழி' என்கிற காலம் மலையேறிவிட்டது. அமெரிக்கா எவ்வழி, அரசு அவ்வழி என்ற மன்மோகன்சிங், சோனியா, சிதம்பரத்தின் காலமாக மாறிவிட்டது. இந்த மாமன்னர்கள் போய் விடுவார்கள். அத்வானி, மோடி போன்ற புது மாமன்னர்கள் காத்திருக்கிறார்கள்- மக்கள் நலன் பற்றிக் கவலையே இல்லாமல்! (பா.ஜ.க.  ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்சிங் அமெரிக்க அரசிடம் அணுசக்தி உடன்பாடு குறித்து 13 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.)

பூமியை லாப வேட்டைக்களமாக மாற்றுதலையே குறியாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கா, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்ற போது ஒரு நிபந்தனை விதித்ததாய் சொல்கிறார்கள். ``ஒன்று-சோனியா பிரதமராக வேண்டும். சோனியா பிரதமர் என்றால், மன்மோகன்சிங் நிதி அமைச்சர் ஆக்கப்பட வேண்டும். மன்மோகன் பிரதமர் என்றால், ப. சிதம்பரம் நிதி அமைச்சர்.''

அந்த வாசகம், உண்மையாகியிருக்கிறது.  றீ

Thursday, 6 November 2008

Singapore Tamil site for Childern learning in TAMIL Language

http://www1.moe.edu.sg/namnaadi/archives/2008/oct/index.htm

[தமிழ்நாடு] திராவிடத்தின் எதிர்காலம் - என் பார்வை ----மாலன்

மாலனின் "திராவிடத்தின் எதிர்காலம்" பதிவில் எழுதிய பின்னூட்டம்.

அன்புள்ள மாலன்,

நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கலும் அதன் பின்புலங்கள் சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. திராவிட அரசியல் பற்றி எழுத வேண்டுமானால், ஒட்டு மொத்த இந்திய அரசியலை அணுகியே திராவிட அரசியலையும் அணுக வேண்டும் என்பது என்னுடைய சின்ன அபிப்ராயம். நீங்கள், கொள்கையிலிருந்து நீர்த்துப் போன, பாப்பாத்தியினை தலைவியாக கொண்ட திராவிட கட்சி, தன் மகன்/மகள்/குடும்பத்திற்கு அதிகாரம் விநியோகம் பண்ணும் தலைவர் என்று வரிசையாக பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலினை என்னை விட நீங்கள் கடந்த 20 - 30 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்து வருகிறீர்கள். அஸ்ஸாமில் மத்திய அரசுக்கு எதிரான மாணவர் புரட்சி நடத்தி முதல்வரான பிரபுல்லகுமார் மகந்தாவின் நிலையென்ன ? அவர்களின் கட்சி என்னவாயிருகிறது ? மாயாவதி ஆட்சிக்கு வந்ததின் பின்னிருக்கும் அரசியல் சூழல்கள் என்ன ? தெஹல்கா தொடங்கி தெருமுனை வரை காறி துப்பிய பிறகும் மோடி ஆட்சிக்கு வந்ததின் காரணங்கள் என்ன ? பிஜேபியின் மீது சவாரி செய்து கொண்டு, பின் பிஜேபி பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலையில் காலை வாரிய ஜேடிஎஸ்ஸும், தேவ கவுடாவும் / குமாரசாமியின் இன்றைய நிலையென்ன ? சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் மட்டுமே முன்னேற்றினார் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸும் ராஜசேகர் ரெட்டியும் இந்த வருட தேர்தலில் தேறுவது கஷ்டப்படுவது ஏன் ? மக்களுக்கான இயக்கம் என்றறியப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி கேரளாவில் CPI(M) Pvt. Ltd என்கிற அளவில் இருப்பதற்க்கான காரண காரியங்கள் என்ன ?

உண்மையில் இரண்டு விதமான பொருளாதாரங்கள் இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் (Political Economics) மற்றும் சித்தாந்த ரீதியான பொருளாதாரம் (Idealist Economics) தண்டவாளங்கள் போல இவையிரண்டும் எந்த கால கட்டத்திலும் ஒன்று சேராது. [அரசியல் பொருளாதாரம் Vs. சித்தாந்த ரீதியான பொருளாதாரம், அதன் பின் விளைவுகளைப் பற்றி ஆராய தான் இந்தியாவின் சமச்சீரின்மை பற்றி தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பி வருகிறேன்] திராவிட அரசியல் என்பது சித்தாந்த ரீதியான பொருளாதாரத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறியதன் பரிணாம வளர்ச்சி தான் இலவச டிவி. உண்மையில் சென்ற தேர்தலில் இலவச டிவி, அரிசி எனக் கொடுத்தும், கூட்டணி ஆட்சியால் தான் திமுகவால் பதவியில் அமர முடிந்திருக்கின்றது. ஜெயா டிவி சொல்லுவது போல இன்றைக்கும் இது மைனாரிட்டி திமுக அரசு தான்.

ஆனால் திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு பங்களித்தவை எவ்வளவோ இருக்கின்றன. இந்தியாவே இட ஒதுக்கீடு என்கிற பேச்செடுத்தாலே அலறும்போது ஒரு சிறு சலனம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. ஊரே அரசு தான் பள்ளிகளை / கல்லூரிகளை நடத்த வேண்டும் என்கிற நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாம் தொடங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் தான் இன்றைக்கு இந்தியாவெங்கும் வியாபித்திருக்கிற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தமிழர்களை முன்னெடுத்து சென்றிருக்கிறது.

வை. கோ போன்ற முக்கியமான திராவிட தலைவர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு கூட்டணி சூழ்நிலையில் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்கான குரல் இன்னமும் ஒலிக்கின்றது. திராவிடம் நேரடியாக சாராத, ஆனால் திராவிட இயக்கத்தினால் உந்தப்பட்டதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என அரசியல் இயக்கங்கள் உருவாகி இருக்கின்றன. எப்படி பாரதீய ஜனதா கட்சியின் மூலங்களை தேடினால், அவை ஜன சங், வி.எச்.பி. சங் பரிவார் ஆரம்பத்தில் கொண்டு போய் விடுமோ, அதை போல, திராவிட அரசியலின் பரிணாம வளர்ச்சி என்பது நேரடியாக திமுக, அதிமுக, மதிமுக வால் மட்டும் தனியாக இருக்காது, அவை பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் நேர்மை, காமராஜின் எளிமை என மொத்தமாக உணரப்பட்டு பல்வேறு கட்சிகளால், சாராம்சத்தினை ஏற்றுக் கொண்டு, தலைவர்களை புறந்தள்ளி வேறுவிதமாக வேர் விட்டு வளரும் என்பது என்னுடைய பார்வை. மற்றபடி, திராவிட அரசியலினை திமுக Vs. அதிமுக என்று பார்ப்பதில் உடன்பாடில்லை.

மற்றபடி தமிழ், தமிழர், திராவிடம் என்று extrapolate செய்வதில் நம்பிக்கையில்லை. திராவிட கட்சிகளாக பரிணமித்து அரசியலுக்கு வருவதற்கு முன்பும், தமிழும், தமிழரும் வாழ்ந்தார்கள். கிட்டத்திட்ட 45 ஆண்டுகளாக தேசிய கட்சிகள், புதிய கட்சிகள், சாதி கட்சிகள் மத்தியிலும், திராவிட அரசியலும், தமிழும், தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இனிமேலும் வாழத்தான் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலேயே, அரசியல் கலப்பில்லாத பெரும்பான்மை முன்னேற்றம் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அரசியல் நேர்மையாய் இருந்திருப்பின் இன்னமும் முன்னேறியிருப்போம் என்பது ஒரு பார்வை. கருணாநிதி Vs. ஜெயலலிதாவினை ஒரு சாதாரணணாய் between devil and deep sea என்று ஒரு குறுகிய பார்வை பார்த்து பேசினாலும், ஒட்டுப் போட்ட மறுகணமே மறந்துவிட்டு, தத்தம் வேலைகளை பார்க்க போய் விடுகின்ற கூட்டம் தான் பெரும்பாலானவர்கள். அவர்களின் உழைப்பு, வியர்வை, மற்றும் உலகமயமாக்கலின் பங்கு இவை தான் தமிழகத்தையும், தமிழினத்தையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறதேயொழிய, தமிழ் தான் உயிர் என்று மேடைப் பேச்சு பேசும் எவராலும், இனத்தையோ, மொழியையோ, நம் வரலாறையோ முன்னெடுத்து செல்ல முடியாது.

நன்றி.

Thursday, October 04, 2007

[இந்தியா] பாருக்குள்ளே நல்ல நாடு!

பஞ்சாப் , ஹரியானாவின் விவசாயிகளுக்கு காசு கொடுக்க மறுக்கும் மத்திய அரசு, ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையினை இறக்குமதி செய்திருக்கிறார்கள். கொள்முதல் விலையாக ரூ.9 [ஒரு கிலோவிற்கு என்று நினைக்கிறேன்] இந்திய விவசாயிகளுக்கு தர மறுத்த நடுவண் அரசு தான், கிலோ ரூ.13-க்கு மட்டமான கோதுமையினை இறக்குமதி செய்து விநியோகித்திருகிறது. இந்த வார பிஸினஸ் டூடேயில் படித்தது. ஆனால் அமைச்சர்களோ அடுத்த 11 மாதத்துக்கு தேவையான சரக்கு நம்மிடத்தில் இருக்கிறது என்று ஜல்லியடிக்கிறார்கள். வாங்கி சாப்பிட்ட மக்களுக்கோ எல்லா வியாதியும் வருமளவுக்கு quality control பார்த்திருக்கிறார்கள். இந்தியாவில் நீங்கள் விவசாயியாக இருந்தால், ஒழுங்கு மரியாதையாக நகரங்களுக்கு வந்து கூலியாட்களாக வேலை பாருங்கள். அதிகப்பிரசங்கித்தனமாக விவசாயமெல்லாம் பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது.

பார்க்க: சி.என்.என்.- ஐ.பி.என் செய்தி

ராஜின்ந்தர் பூரிக்கு இருக்கக்கூடிய தைரியம் சும்மா சொல்லக்கூடாது. அவுட்லுக் போன்ற ஒரு முக்கியமான பத்திரிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியினை கிழித்திருக்கிறார். இதில் கருணாநிதியினை உள்ளே தள்ளச் சொல்லும் சட்டம் வேறு.

"Did Ram study engineering in college? He was a drunkard. There is no historical evidence that Ram ever existed," Tamil Nadu CM M. Karunanidhi has said. It matters little what Ram was or was not. What matters is that this veteran politician has violated Section 153-A of the Indian Penal Code by creating disaffection among communities. Under law, he can be prosecuted and sent to prison for three years.

அடுத்து ராஜின்ந்தர் பூரி கிழிக்க வேண்டிய கியுவில் இருப்பவர்கள் - ஜெயலலிதா, அத்வானி, சோனியா, மன்மோகன் சிங் மற்றும் மொத்த சங் பரிவார் கும்பல். எழுத்தினை படித்தப் போதே இது ஒரு ஆரஞ்சு பார்ட்டி என்று கண்டிப்பாக தெரிகிறது. "மவனே நீ மெட்ராஸ் வராமயா போய்டுவே, அப்ப வைச்சுகறோம் மச்சி கச்சேரிய"

முக்கிய எச்சரிக்கை: இதய பலவீனம் கொண்டவர்கள், சடாலென உணர்ச்சி வசப்படுபவர்கள், திமுக தொண்டர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது.

பார்க்க - அவுட்லுக் - புல்ஸ் ஐ

அருகருகே இரண்டு ட்ரெயின்கள் ஸ்டேஷனுக்கு வந்ததில் ஏற்பட்ட நெரிசலில், உத்தரபிரதேஷின் முஹல்சராயில், ஏற்பட்ட தடியடியில் 14 பெண்கள் மரணமடைந்திருக்கிறார்கள். இறந்த பெண்கள் அனைவரும் பீகாரினை சேர்ந்தவர்கள். ஜூதியா என்கிற பண்டிகையினை கொண்டாட உத்தரபிரதேஷுக்கு வந்திருந்தவர்கள். ஜூதியா என்பது அம்மாக்கள் தங்கள் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது, எப்படி தமிழ்நாட்டில் பெண்கள், தங்கள் கணவன்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வரலட்சுமி நோன்பு இருப்பார்களோ அதைப் போல. ஆனால் இந்த தடியடி வெறும் நெரிசலால் மட்டும் ஏற்பட வாய்ப்பில்லை., இவ்வளவு பெண்களும் ஏன் இரண்டு டிரெயின்களை பிடிக்க இவ்வளவு அவசரப்படவேண்டும், 10 நிமிட இடைவெளியில் ஒரே இடத்துக்கு போக இரண்டு டிரெய்ன்களை எப்படி ரெயில்வே நிர்வாகம் அனுமதித்தது [கோயம்பேடு போன்ற பஸ் நிலையங்களில் இது சாத்தியம்] பல கேள்விகள், ஆனால் போனது அப்பாவி உயிர்கள். இந்தியாவில் உயிர்களுக்கான மரியாதை இவ்வளவுதான். நண்பர் சுரேஷ், கொத்து பரோட்டா எழுதிய போது எழுதிய பின்னூட்டத்தில் ஏன் எல்லா ஊர்களின் இருண்மையான பக்கங்களை மட்டுமே எழுதுகிறீர்கள் என கேட்டிருந்தார். உண்மையில் நிழலுலகத்தினை விட Establishment மிக பயங்கரமானதாக இருக்கிறது. இதைப் பற்றிய முழுமுச்சான செய்திகள் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் இடம் பெறும் 'தகுதி' பெறுமா என்று தெரியவில்லை, அதனாலேயே ஒரு கவன ஈர்ப்பாக இருக்கட்டுமே என்று இருண்ட பக்கங்களை எழுதுகிறேன்.

பார்க்க - டி.என்.ஏ செய்தி

India Shining என்கிற தேசபக்தி பிரச்சாரத்தினை கையிலெடுத்து அதற்கு அரசு பணத்தினை வாரியிறைத்து வீட்டுக்கு போனார்கள் பி.ஜே.பியினர். அப்போது காங்கிரஸ் மிக சாதுர்யமாக, வேலை கிடைக்கலை, வருமானம் இல்ல என சொல்வது போல ஒரு விளம்பரத்தினை போட்டு கல்லா கட்டி ஆட்சியிலும் அமர்ந்தாகி விட்டார்கள். டெல்லியிலிருக்கும் இருக்கைககளில் மந்திர மாயாஜாலங்கள் இருக்கும் போலிருக்கிறது. பின்னே, பி.ஜே.பியினர் செய்த அதை தவறினை கொஞ்சம் ஸ்மார்ட்டாக, India@60 என்கிற பெயரில் நியுயார்க் நகரில் ஒரு பெரும் கூத்தினை 10 மில்லியன் டாலரில் [சுமார் 40 கோடி] அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது.

The $10-million mega promotional blitz of India@60 makes for an interesting story, The four-day marketing showcase, named IncredibleIndia@60, and abbreviated to India@60, had a singular purpose of promoting the country in the financial capital of the world. The branding campaign that began on 23 September was part of the 60th anniversary celebrations to commemorate Indian Independence. It was organised by the Ministry for Tourism and Culture, and the Confederation of Indian Industry (CII), an industry body.

இதில் என் கண்ணில் பட்ட ஒரு விளம்பரத்தின் வாசகம் தான் என்னை அதிர செய்தது "Ninety per cent of MNCs make a profit in India," screamed a billboard in the ultra-expensive Times Square advertising space, in a bid to project India as a favourable investment destination." இந்த நாட்டில் ஒரு பக்கம் ஏழை விவசாயிகளுக்கு ரு.9 வழங்க முடியாத அரசு, விபத்தில் இறந்துப் போன அப்பாவி பெண்களுக்கு நஷ்டஈடு தர வருடங்களை இழுத்தடிக்கும் அரசு, பிரச்சனைகளை உள்நோக்காமல் ராமரா, பாபரா, கருணாநிதியா, ஜெயலலிதாவா என பொறுப்பின்றி பேசி திரியும் ஊடகங்கள், இவைகளுக்கு நடுவில், இந்திய பெருமையினை நிலைநாட்ட நியுயார்கில் செலவு 40 கோடி ரூபாய்கள். எங்கே போகிறோம் நாம் ? அப்புறம் ஏன் நாடு முழுக்க ஏற்றத்தாழ்வுகள் வந்து, ஆயுத போராட்டம் நடக்காது ?

பார்க்க - பிஸினஸ் வேர்ல்டு செய்தி [அனுமதி தேவை]

Monday, June 04, 2007

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

அன்புள்ள திரு. கருணாநிதிக்கு,

வணக்கம். என்னைப் போன்றவர்களை நீங்கள் மறந்திருக்கக்கூடும். என் பெயர் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன் என்கிற முறையிலும், திமுக அரசு வரவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு உங்கள் தலைமைக்கு ஒட்டுப் போட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கான ஊடகங்கள் அனைத்தும் முற்றுப்பெற்றமையால் [ஒன்று உங்களுக்கு ஜால்ரா அடிக்கின்றன அல்லது வாய் மூடி இருக்கின்றன] இங்கே எழுத வேண்டிய கட்டாயாமாகிறது.

நீங்கள் வெற்றி பெற்ற உடனேயே உங்களுக்கு ஒரு மடல் எழுதி அதை பதியாமல் வைத்திருந்தேன். அதில் முக்கியமாய் எழுதியது உங்கள் பேரன்களை கொஞ்சம் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஆனால், நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரன்களையே ஒரங்கட்டி, உங்கள் வாய்மையால் ஊர் வாயினை அடைக்க முயற்சித்து, கொண்டிருக்கிறீர்கள். பாவம், உங்களுக்கு இன்னமும் பழைய நிலை, முரசொலியில் உங்களுக்கு பிடிக்காதவர்களை ஒரங்கட்டி, கட்டம் கட்டினால், உலகத்திற்க்கே பிடிக்காமல் போனது அந்தக் காலம். காலம் மாறிவிட்டது ஐயா.

காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், நடுவண் அரசினை நிர்பந்திக்க முடியாது என்று காரணம் கூறிவிட்டு, உங்களுக்கு மாற்றாக ஒரு மேலாண்மை மையம் உருவாகிடப்போகிறது என்கிற பயத்தில் ஒரே நாளில் இந்தியாவில் மேன்மையான அமைச்சர்களுள் ஒருவராக விளங்கிய உங்கள் பேரனை நீக்கச் சொல்லி வற்புறுத்தி, இப்போது உங்கள் மகளை எம்.பியாக்கி இருக்கிறீர்கள். தயாநிதி மாறனை அமைச்சராக்கும்போது நீங்கள் சொன்னதாக சொன்ன வாக்கியம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவருக்கு நன்றாக ஹிந்தி பேச தெரியும், அதனால், அவர் நல்ல தொடர்பினை மாநில-மத்திய அரசினிடையில் ஏற்படுத்துவார் என்று. டி.ஆர். பாலு போன்ற மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது, எல்லா தகவல்களும், தயாநிதி வழியாக வரட்டும் என்று சொன்னீர்கள். இன்றைக்கு தயாநிதிக்கு ஹிந்தி செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துப் போய் விட்டதா ? உங்களுக்காக தேவைப்பட்ட போது, தயாநிதி திமுகவின் முகமூடி, இப்போது அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு ஆட்டமாடும் அகம்பாவம் கொண்டவர். கனநேரத்தில் காற்றோடு போய்விட்டது உங்களுடைய தாத்தா-பேரன் உறவுகள், உங்கள் குடும்பத்தினர் முன்பு. சன் டிவி செய்தி பிரிவில் இருந்த ஒரு நண்பர், உங்களைப் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், உங்களை ஜெயலலிதா ஆட்சியில் சிறையிலடைத்தப் போது, சன் டிவி பட்ட கஷ்டங்களையும், அதையும் தாண்டி மன உறுதியோடு கலாநிதி மாறன் உங்களுக்காகவும், ஒட்டு மொத்த திமுகவிற்குமாய் துணிந்து செயல் பட்டதையும் விரிவாக விளக்கினார். உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும், வெறும் மேரி பிஸ்கெட்டும் தண்ணீரோடும், உங்களுக்காக, தமிழகத்தையே உங்கள் மீது திரும்ப வைத்தவர்கள் அவர்கள். போகட்டும் விடுங்கள். கனிமொழி நன்றாக பேசுவார் என்கிறீர்கள். உங்கள் கட்சியில் வெற்றிகொண்டான் என்றொரு பேச்சாளன் முப்பது வருடங்களாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு பேசியவர் இருக்கிறார். ஓவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், வெற்றிகொண்டான் வெளியில் இருந்ததை விட ஜெயிலில் இருந்தது அதிகம். அவருக்கென்ன செய்யப் போகிறீர்கள் - பேசுவது மட்டுமே எம்.பியாவதற்கான தகுதியென்றால் ? விடுங்கள். அது உங்கள் குடும்ப பிரச்சனை.

சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் தாண்டி துணை நகரம் அமைக்கப்படும் என்றொரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள் ? வெளியிட்ட உடனேயே உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ம.க பிரச்சனை செய்ய, இரண்டாவது நாளே அதை கை கழுவி விட்டீர்கள். ஒரு அரசு எடுக்கக் கூடிய முடிவு என்பது, பல்வேறு காரணங்களைப் பார்த்து, வகைப்படுத்தி, பிறகே ஒரு உத்தரவினையோ, முடிவினையோ எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்தேன் என்று ஆள்வதற்கு பெயர் அரசாட்சியல்ல. மன்னராட்சி. ஆனால், நீங்களோ, உங்களின் கூட்டணி கட்சியில் குரலுக்காக சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் மிக முக்கியமான ஒரு தேவையினை சர்வசாதாரணமாக ஒரங்கட்டிவிட்டீர்கள். இந்த மாநகரத்தில் பிறந்ததிலிருந்து வசித்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, அது ஒரு பேரிடி. சரி என்னைப் போன்ற மடையர்கள் 6 கோடி மக்கள் தொகையில் கொஞ்ச பேர் தான், இதை விடுங்கள்.

6 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் போகும் எல்லோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற ஒரு உத்தரவினை நீதிமன்றம் வழியாக சொன்னீர்கள். 6 மாதம் போய், அரக்க பரக்க, மே 29/30/31 தேதிகளில் தங்கள் குடும்பத்தினையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் குடும்பத்திற்கு மூன்று, நான்கு ஹெல்மெட்கள் வாங்கினார்கள். பண வாசனை தெரிந்த முதலாளிகள், ரூ.300 ஹெல்மெட்டினை ரூ.500-கும் ரூ-800க்கும் விற்றார்கள்.ஜூன் 1 அன்றைக்கு சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2-ஆம் தேதி நீங்கள் ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்கள், ஹெல்மெட் அணிவதினை நிர்பந்திக்கக்கூடாது என்று. என்ன நடக்கிறது இங்கே. நேர்மையாய் சட்டத்தினை மதித்து ஹெல்மெட் வாங்கிய அனைவரையும் முட்டாள்ளாக்கி விட்டீர்கள். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினனுக்கு ரூ.1500 - 2000 என்பது பெரிய தொகை, அவனுடைய சம்பளத்தில் அது 20% மேல். இப்போது ஹெல்மெட் இல்லாமலும் வண்டியோட்டலாம் என்று சாதாரணமாய் சொல்கிறீர்கள். இது முழு நம்பிக்கை துரோகம். முதலாளிகள் வாடிக்கையாளர்களை பல்வேறு வார்த்தைகள் பேசி ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அரசாங்கமே, குடிமக்களை ஏமாற்றுவதை இப்பொதுதான் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய இழப்பு இது. இரட்டை நாக்கு என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம், எதிர் கட்சிகளையும், எதிரி கட்சிகளையும் முரசொலியில் கட்டம் கட்டிய தாங்கள் செய்வது என்ன ? நேர்மையாய் இருப்பதின் பலன், ஏமாளியாய், இளிச்சவாயனாய் இருப்பதா? ஹெல்மெட் என்ன தங்கநகையா, இல்லாமல் போனால், அடகு வைத்து குடும்பம் நடத்துவதற்கு. உங்களை நம்பி ஒட்டுப்போட்ட மக்களுக்கு உங்களாலான பலன் ரூ.2000 நஷ்டம். சரி இதையும் விட்டு விடுமோம்.

மூன்று அப்பாவி உயிர்கள் உங்கள் மகனின் ஆதரவாளர்களால், கொல்லப்பட்டதற்கு, நான் என்ன ரெளடியின் அப்பனா என்று சீறுகிறீர்கள். சிபிஐக்கு உத்தரவிட்டேன் என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். உங்களது பவளவிழாவிற்கு ராஜ் தொலைக்காட்சியினை வரவழைத்து, அவர்களுக்கு நேரடியான தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், தூர்தர்ஷனின் வேனினை வாங்கி வைத்துக் கொண்டு வர்ணஜாலம் காட்டிய உங்களுக்கு, சிபிஜக்கு உத்தரவிடுவதா பெரிய விஷயம்.

சன் தொலைக்காட்சி இல்லையென்றானதும், திமுக அரசும், ராஜ் தொலைக்காட்சியும் சேர்ந்து 'கலைஞர் டிவி' நடத்தும் என்று அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீங்கள் தேர்தல் கமிஷனில் கொடுத்த கட்சியின் நிதி அறிக்கையினையும், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக முதலீடு செய்யப்போகும் தொகையினையும் உங்களால் ஈடு கட்ட முடியுமா ? விவரமறிந்த ஊடகங்களில் இருக்கும் என் நண்பர்கள் 50 -100 கோடி ரூபாய்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இது திமுக அரசியல் கட்சியின் டிவியா ? அப்படியென்றால், 50 கோடி ரூபாய்கள் திமுகழகத்திற்கு எங்கிருந்து வந்தது ? இல்லை இது உங்கள் குடும்ப நபர்களின் முதலீட்டில் வெளியிடப்படும் தொலைக்காட்சியா ? அப்படியேயென்றாலும், 100 கோடி ரூபாய்களுக்கு சொந்தமானவர்கள் யார் யார் ? அப்பாவி தமிழனுக்கு 'சிவாஜி' உரிமையினை 4 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். 4 கோடி ரூபாய்கள் என்பது மென்பொருள் புத்தியில் ஊறிப் போன என்னைப் போன்ற மரமண்டையர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள். ஒரு படமே ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினால், அத்தொலைக்காட்சியினை நிர்வகிக்க எங்கிருந்து வந்தது பணம் ? இதில் கல்லா கட்டியவர்கள் ராஜ் உரிமையாளர்கள். நல்லது அதுவும் போகட்டும்.

விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் என்கிற ஒற்றை சொல்லாடலிலும், அவர்கள் திரும்பி வந்த பின் ஒரு ஊடகத்திற்கும் அவர்களின் பேட்டியினை தராமல், அவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று ஒரம்கட்டி நடுவண் காங்கிரஸ் அரசிற்கு உங்களின் விசுவாசத்தினை நிரூபித்து விட்டீர்கள். மனதினை தொட்டு சொல்லுங்கள், இன்றளவும், என்றைக்காவது புலிகள் உங்களையோ, இல்லை தமிழகத்தில் ஆளுபவர்களையோ பகைத்துக் கொண்டார்களா ? தமிழீழம் கிடைத்தால் சந்தோசமடைவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், தொடர்ச்சியாக புலிகளை ஒரங்கட்டி வைத்திருக்கிறீர்கள். உலகில் இலங்கை பிரச்சனையினை கவனித்து வரும் குழந்தைக்குக் கூட தெரியும், புலிகள் இல்லாத ஈழம் சாத்தியமற்றது என்று. உங்களின் அரசியல் லாபத்திற்காக, ஏன் தமிழ், தமிழன் என்று ஜல்லியடிக்கிறீர்கள். நாளை ஈழம் மலர்ந்தவுடன் நீங்கள் ராஜ் டிவி நிறுவனர்களுக்கு சொன்னது போல, நாங்கள் வெகு காலமாக களவியல் காதலில் முழ்கி இருந்தோம் என்று உங்களை முன்னிறுத்திக் கொள்வீர்களா ?

திடீரென அதிமுக கட்டிடம் இடிக்கப்படும் என்று உங்கள் மகன் மேற்பார்வையில் இருக்கும் CMDAவிலிருந்து ஒரு அரசாணை வருகிறது. இதற்கு ஜெயலலிதா அம்மையார் சபதம் போட்டது, அறிக்கை விட்டது எல்லாம் வேறு விவாதம். 1972-இல் கட்டப்பட்டு, கிட்டத்திட்ட 35 வருடங்களாக இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகம் எப்படி திடீரென விதிகளை மீறியதாகும். அப்படியே விதிகளை மீறி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம், கொஞ்சம், என்னுடைய அலுவலகத்திற்கு பின்னாடி இருக்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கு வாருங்கள். போத்தீஸ், நல்லீஸ், சரவணா, ஜெயசந்திரன், ஜி.ஆர்.டி, ஆரெம்கேவி என வரிசையாய் கட்டிடங்கள். வண்டி நிறுத்த கொஞ்சமும் இடமில்லாத வகையில் தொடர்ச்சியாய் நெரிசலை உண்டாக்கக் கூடிய கட்டிடங்கள். இவையெல்லாம் விதிமுறைகளை மீறவில்லையா ? ஏன் வருடக்கணக்கில் எதுவும் மாறவில்லை. கேட்டால், நீங்கள் புள்ளிவிவரப்புலியாய் மாறி 'சென்ற ஆட்சியிலே...... கழக ஆட்சியிலே' என வாய்ப்பந்தல் போடுவீர்கள். நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை மக்களின் பார்வைக்கு இல்லை. ஆகவே நீங்கள் தப்பித்து விடுவீர்கள். இதைத் தாண்டி, கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று வசைப்பாடிய நீங்கள், எப்படி இப்படியொரு விஷயத்தினை கையிலெடுத்து பேச முடியும்.

ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் "எம்ஜிஆரை நம்பினேன், கவுத்தான். வைகோவை நம்பினேன் கவுத்தான். சரி உள்ளுக்குள்ளேயே இருக்கட்டுமேன்னு பேரனுக்கு குடுத்தேன், அதுவும் சரியில்லை, நான் யாரைதான் கட்சியை பாதுக்காக்க நம்பறது, அதுதான் குடும்பத்திலிருந்தே பார்க்கறேன்" என்கிற ரீதியில் நீங்கள் சொன்னதாய் படித்தேன். இதை நம்பினேனா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு பேசக் கூடிய நபர்தான் நீங்கள் என்பதும் [நினைவிருக்கிறதா, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! - எமர்ஜென்சிக்கு பிறகு] தெரிந்ததே.இதில் புரியாதது, எப்படி ஒரு ஜனநாயக கட்சியில் கட்சியினை நிர்வகிக்கும் பொறுப்பும், பாதுகாவலும், உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறீர்கள். டெல்லியில் அழகிரியினை ப் பற்றி பேச்சு வருகையில், "அவன்தான் கொன்னான்னு நீ பாத்தியா ? " என்று சீறி இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்தீர்களா, மூன்று மாணவிகளை பக்கத்திலிருந்து எரித்தததை ? மதுரை முழுக்க தெரியும் அழகிரி அவர்களது ஆளுமை. அந்த மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதன் காரணமும், ஒரு அலுவலகம் சீரழிக்கப்பட்ட காரணமும். பாசம் கண்களை மறைக்கிறதா ஐயா ? இந்த வார குமுதம் பேட்டியில் வைரமுத்துவின் கேள்வி பதிலில் நீங்கள் "தசரதனுக்கு கீரிடம் வந்த போது தானே, கேடு வந்தது" என்று சொன்னதாக மனமுருகியிருக்கிறார் கவிஞர். பிரச்சனை கீரிடத்தில் மட்டுமல்ல, கட்டிக் கொண்டவர்களின் தொணதொணப்பும் தான். அவுட்லுக் எக்ஸ்பிரஸில் உங்களுடைய குடும்ப கிளை படம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். உண்மையில் பிரச்சனை அங்கேயிருந்து தான் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் திமுகவின் வரலாற்றினை திரும்பி பாருங்கள். பெரியார் மணம் செய்து கொண்டது தெரிந்து, அண்ணா முதற்கொண்ட ஐம்பெரும்குழுவினர் ஒரு இயக்கும் ஒரு குடும்பத்தின் பிண்ணணியில் போய்விடக் கூடாது என்கிற தார்மீக அடிப்படையில் வெளியில் வந்து தொடங்கியது தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் இன்றோ உங்கள் குடும்பத்தினருக்காகவும், அவர்களின் செட்டில்மென்டிற்காகவும் திமுகவினை திருக்குவளை கருணாநிதி குடும்பத்தினர் முன்னேற்றக் கழகமாக மாற்ற துடிப்பது 20 வருடங்களாக, திராவிட பாரம்பரியத்தோடும், உங்களின் தலைமையோடும் இருந்து வந்த என்னைப் போன்றவர்களுக்கு வருத்தத்தையும், வெறுமையையும், வெறுப்பினையும் உண்டாக்கியிருக்கிறது.

84 வயதில் இன்னமும் உங்களை கர்வத்தோடும், பிரம்ம்பிப்பொடும் பார்க்கிறேன். ஆனால், செயல்கள் உயராத போது, சொற்பேச்சு உயர்ந்து என்ன பயன். என்னை போன்றவர்கள் உங்களின் அரசியல் அனுபவத்தில் 50 விழுக்காடுக் கூட வாழாதவர்கள். ஆனாலும், செயல்களைக் கொண்டே ஒருவரின் நிலையினை எடையிட இயலும் என்கிற நிலையில் உங்களின் செயல்களுக்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை. முகமது பின் துக்ளக்கினையொட்டிய வகையில் உங்கள் முடிவுகளும், நிலைப்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. குறளோவியம் கண்டவர் நீங்கள், அதிலிருந்து ஒரு குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு.

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.