Thursday, 24 July 2008

எமிரடேச்ஸ் பிளைட் துபாய் டு லண்டன்

நான் இந்த கட்டுரை பிளைட் பயணம் செய்யும்போது சொல்லுவதாக வைத்து இருக்கறேன். நான் பிப்ரவரி மாசம் இந்தியா வந்து திரும்பும் போது எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன் . கோயம்புத்தூர்ல் இருந்து சென்னை ஜெட் விமானம் . பின்னர் அதிகாலை மூணு மணிக்கு எமிரடேச்ஸ் விமானம் மூலம் துபாய் கிளம்பி வந்தேன். மதியம் பனிரெண்டு மணி இருக்கும் துபாய் வந்து சேர்ந்தது. பின்பு மாந்செஸ்தெர் பிளைட் பிட்பகல் மூணு மணிக்கு தான். அதே எமிரடேச்ஸ் விமானம் . பிற்பகல் பிளைட் என்பதால் வளைகுடா நாடுகள் மீது பிளைட் பறக்கும் போது அதன் பூவி அமைப்பு கவனிக்க நன்றாக இருக்கும் . ஒரே செக்க செவேல் என்ற நிறம் . நீங்கள் ஜன்னல் ஓர இருக்கை கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் . அதுவும் விமான கடைசீயும் இல்லாமல் மதியும் இல்லாமல் ஜன்னல் சீட் வாங்கினால் நலம். பிளைட் இன் முதல் இரண்டு மணி நேரம் போவதே தெரியாது .

No comments: