நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்.
உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.
Wednesday, 1 October 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment